மாணவர்களுக்கு கல்வி- உதவி|மகளிருக்கு சேலை|முதல்வர் HBD நாளில், தவெக கொண்டாட்டம் |

திருப்போரூரில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பாராட்டு விழா- மகளிர்களுக்கு சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தவெக மாவட்ட செயலாளர் சி.வி.தீனா, பா.விஜயராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்று வழங்கினர்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு மாணவர்கள் தங்கள் கல்வியை தொடரவும், பொருளாதார, சமூகக் காரணங்களால் தடையேதுமின்றி பள்ளிக் கல்வியை நிறைவு செய்வதற்காகவும், அரசு பலவகைகளில் மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இது போன்ற செயல்பாடுகளைப் பார்த்து, அரசு மட்டும் உதவி செய்தால் போதாது என சில தன்னார்வலர்களும், அரசியல் கட்சிகளில் பொறுப்பில் உள்ளவர்களும் மாணவர்களை ஊக்குவித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தண்டலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவரான தண்டலம் எம். ஆனந்தன் (கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்) ஏற்பாட்டில்; தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தண்டலம் கிராமத்தில் இருந்து பயின்று பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதலிடம் மற்றும் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருப்போரூர்- மாமல்லபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள புலேந்திரன் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் சி வி தீனா (எ ) தினகரன் தலைமையில், சிறப்பு விருந்தினராக திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர். பா. விஜயராஜ் பங்கேற்று
இந்த வருடம் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி சான்றிதழ், விருது மற்றும் ஊக்கத்தொகை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கியும்.,
முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் மற்றும் நான்காம் இடம் பெற்ற மாணவர்களுக்கு முறையே ஊக்கத் தொகையாக 5000/-, 3000/- 2000/-1000/-ரொக்க தொகையினை சுமார் 64 மாணவர்களுக்கு வழங்கினர்.

அதனை தொடர்ந்து தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 2000 மகளிருக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான என் வீரா என்கின்ற வீராசாமி உட்பட மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுகுமாரன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *