சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு 85 லட்ச ரூபாய், தங்கம், வெள்ளி காணிக்கை|

உலகப்புகழ்பெற்ற திருவள்ளூர் மாவட்ட அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணியதில் 55 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 85 லட்ச ரூபாயும், 36 கிராம் தங்கம், மூன்று கிலோ வெள்ளி ஆகியவற்றை செலுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட சிறுவாபுரியில் உலகப்புகழ் அருள்மிகு திரு. பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு நிகராகப் போற்றப்படும், இங்கு தமிழகம் மட்டும் இன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும், கடந்த 55 நாட்களாக கோவிலுக்கு வந்து சென்ற பக்தர்கள்; உண்டியலில் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, உதவி ஆணையர் சிவஞானம் மேற்பார்வையில் பணி நடைபெற்றது. 120 தன்னார்வலர்கள், காணிக்கை பணம் என்னும் பணியில் ஈடுபட்டனர். ரூ 85 லட்சத்து 87 ஆயிரத்து 141 ரூபாய் ரொக்க பணம், 36 கிராம்- 920 மில்லி கிராம் தங்கம், மூன்று கிலோ 617 கிராம் வெள்ளி மட்டுமின்றி வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த காணிக்கை பணம் என்னும் பணியின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் முருகன், ஆலய மேற்பார்வையாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் அதுசமயம் உடன் இருந்தனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *