கப்பலில் ஆழ்கடல் டூரிசம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

கடல்வாழ் உயிரினம் போல மனிதனும் ஆழ்கடல் சென்று வருமளவு சுற்றுலா உலகம் சிறப்பாகி வருகிறது. தமிழ்நாட்டில், ‘ஆழ்கடல் சொகுசுக்கப்பல் சுற்றுலா’ தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சுற்றுலாப் பயணியருடன் சொகுசுக் கப்பலில் ஆழ்கடல் சென்று வரும் வகையில் ‘கார்டிலியா’ என்ற நிறுவனம் சொகுசுக் கப்பல் சேவையை வழங்கவுள்ளது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் பயண திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், துறைமுகம் – விசாகப்பட்டினம் – புதுச்சேரி சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை என ஐந்து நாட்கள் பயணம் செய்யும் வகையிலும் இந்த சொகுசுக் கப்பல் இயக்கப்படவுள்ளது. பிரீத்தி -எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *