பழமை

பொன்னேரியில் முதலாம் ராஜேந்திர சோழன் கட்டிய அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் திருக்கோவிலில் பழமை மாறாமல் திருப்பணி நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நியமிக்கப்படும் ஜோதிடர்களின் முதன்மைப் பணி, கோயில்களின் ஆகம விதிகள், ஆன்மிகச் சடங்குகள் மற்றும் திருவிழாக்களைச் சரியான காலக் கணிப்புடன் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவது. பெரிய மற்றும் முதுநிலை திருக்கோயில்களில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகள் தடையின்றி, சாஸ்திர முறைப்படி நடைபெற ஜோதிடர்கள்/ பஞ்சாங்கம் கணிப்பது அவர்களின் முக்கிய பணி ஆகும். கோயில்களில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களான சித்திரைத் திருவிழா, பிரம்மோற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்றவை எந்தெந்த தேதிகளில், எந்தெந்த நட்சத்திர மற்றும் திதி திசைகளில் தொடங்க வேண்டும் என்பதைக் கணக்கிட்டுக் கூறுவது.
கொடியேற்றம், தேரோட்டம், மற்றும் தீர்த்தவாரி போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்த நேரத்தைக் குறித்துக் கொடுப்பது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியிடப்படும் கோயிலின் சுயசார்பு பஞ்சாங்கம் அல்லது திருக்கணித/வாக்கிய பஞ்சாங்கங்களை ஒப்பிட்டு, அந்த ஆண்டின் கிரக நிலைகளுக்கு ஏற்ப கோயில் வழிபாட்டு நேரங்களை முறைப்படுத்துவது. சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படும் காலங்களில், கோயில்களை அடைக்கும் நேரம் மற்றும் கிரகண சாந்தி பூஜைகள் செய்வதற்கான சரியான நேரத்தைக் கணக்கிடுவது. கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கான பாலாலயம் செய்யும் நேரம் மற்றும் திருப்பணிகள் முடிந்த பிறகு நடத்தப்படும் மகா கும்பாபிஷேகத்திற்கான சுப முகூர்த்த நாட்களை ஆகம வல்லுநர்களுடன் இணைந்து ஜோதிட ரீதியாகக் கணிப்பது. ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களைத் தவிர்த்து, கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதற்கான உகந்த நேரங்களை அர்ச்சகர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்திற்குத் தெளிவுபடுத்துவது, கோயிலின் ஆன்மீக நிர்வாகம் மற்றும் ஆகம சடங்குகள் எந்தவித காலக் கணக்கீட்டுத் தவறும் இல்லாமல் சீராக நடப்பதை உறுதி செய்வது, ஆகம விதிகளுக்கு மாறாக திருப்பணிகள் நடைபெறுவதாக வரும் புகார்கள் மீது சம்பந்தப்பட்ட திருக்கோவில்களுக்கு சென்று ஆகம விதிகள் மற்றும் HRCE விதிமுறைகள், உயர்நீதி மன்றம். மற்றும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை தமிழக அரசுக்கும்-இந்து சமய அறநிலையத் துறையின் தலைமை இயக்குனரத்திற்கும் வழங்கி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பரிந்துரை செய்வது இந்து சமய அறநிலையத்துறையின் ஆகம ஜோதிடர்களின் முக்கிய கடமையாகும்.



ஆகம விதிகளுக்கு மாறாக திருக்கோயில்களில் திருப்பணிகள் மற்றும் குடமுழுக்கு நடைபெறும் போது, ஆன்மீகம், கட்டடக்கலை, மற்றும் பாரம்பரிய ரீதியாகப் பல கடுமையான தீமைகளும் பாதிப்புகளும் ஏற்படுவதாக ஆன்மீகப் பெரியோர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடுகின்றனர். ஆகம சாஸ்திரங்களின்படி, ஒரு கோயிலின் கருவறை, கோபுரம், சிலைகளின் அளவுகள் மற்றும் திசைகள் ஆகியவை பிரபஞ்ச ஆற்றலை’ ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. விதிகளுக்கு மாறாக இவற்றை மாற்றியமைக்கும் போது, கோயிலின் தெய்வீக சக்தி மற்றும் நேர்மறை ஆற்றல் குறைகிறது குறிப்பிட்ட மந்திரங்கள், வழிபாடுகள் மற்றும் கட்டுமான அளவுகள் மாறும்போது, அல்லது சம்பந்தப்பட்ட கோவிலின் ஆகம விதிகளுக்கு மாறாக புதிதாக மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளால்’ அந்த ஆலயத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கான முழுமையான தெய்வீக பலன் பக்தர்களுக்குக் கிடைக்காது என ஆகம நூல்கள் கூறுகின்றன. திருப்பணி என்ற பெயரில் சுவர்களில் உள்ள பழங்காலக் கல்வெட்டுகள் மணல் வீச்சு அல்லது இரசாயனங்கள் மூலம் சுத்தம் செய்யப்படும்போது, அவை தேய்ந்து வரலாறுகள் நிரந்தரமாக அழிகின்றன கருவறையின் நீளம், அகலம், உயரம் மற்றும் விமானத்தின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் வாஸ்து தோஷங்களை ஏற்படுத்தும். இது அந்த ஊருக்கும், நாட்டை ஆளும் அரசவைக்கும், மக்களுக்கும் பஞ்சம், நோய் போன்ற கேடுகளை விளைவிக்கும், என்பது ஆகம நம்பிக்கை பாரம்பரியமாகக் கோயில் கட்ட பயன்படுத்தப்படும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு காரை ஆகியவற்றுக்குப் பதிலாக நவீன சிமெண்ட் மற்றும் கான்கிரீட் பயன்படுத்தும்போது, கட்டடத்தின் ஆயுள் குறைவதோடு வெப்ப சமநிலையும் பாதிக்கப்படுகிறது. ஆகமத்தின்படி’ கட்டப்பட்ட கோயிலில், அதே ஆகம விதிகளின்படிதான் திருப்பணிகளும் வழிபாடுகளும் செய்யப்பட வேண்டும். வெவ்வேறு வழிமுறைகளைக் கலக்கும்போது, வழிபாட்டு முறைகளில் குழப்பமும் ஆன்மீகக் குறைபாடுகளும் ஏற்படும். விதிமீறல்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும், சமூகத்திற்கும் அமைதியின்மை, வறட்சி, அல்லது இயற்கை பேரிடர்களை விளைவிக்கும் என்று ஆன்மீக வேத நூல்கள் எச்சரிக்கின்றன. இத்தகைய காரணங்களால் தான், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற சட்ட அமைப்புகள், தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளும்போது ஆகம விதிகளையும், அதன் பாரம்பரிய வழிமுறைகளையும், கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட, மெதூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனுறை அருள்மிகு ஸ்ரீ பார்வதீஸ்வரர் திருக்கோவில் திருப்பணியானது ஆகம விதிகளுக்கு உட்பட்டு, நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படி’ அதன் தொன்மை மாறாமல் சிமெண்ட், ரசாயனம் போன்ற செயற்கை முறை இன்றி சுண்ணாம்பு, கடுக்காய், வெள்ளம், கத்தாழை மற்றும் இயற்கை மூலிகைகளைக் கொண்டு கட்டுமானத்திற்கான கலவை உருவாக்கப்பட்டு HR&CE விதிமுறைகளுக்கு உட்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக மயிலாடுதுறையைச் சேர்ந்த மதன் என்ற ஸ்தபதியின் தலைமையிலான குழுவினர் இந்த இறை பணியினை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் ராஜேந்திர சோழன் எப்படி கோவில் கட்டுமானத்தை நிறுவினானோ அதேபோன்று திருப்பணியை செய்து வரும் திருப்பணி குழுவினர், பாராட்டுக்குரியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்.கோ.முத்து
