சாவுக்கு காரணம் கவுன்சிலர்கள் ! தற்கொலை செய்தவர் கடிதம்….

என்னுடைய சாவுக்குக் காரணம் கவுன்சிலர்கள் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு ஆசாமி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சூளையைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு இரண்டு மனைவிகள். குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பார்சல் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இரண்டாவது மனைவி விஜயலட்சுமி.

திருவாரூரை சேர்ந்தவர். சம்பவத்தன்று விஜயலட்சுமி வீட்டிற்குச் சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பியவர், ஸ்கிப்பிங் போடும் கயிற்றில் அறையில் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். அருகில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பழனியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். பழனியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். உடற்கூராய்வு பணிக்காக பழனியின் உடல் மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப் பட்டுள்ளது. இறந்து போன பழனி, கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். “தர்கா மோகன் மகன் பிரதீப், ஜோதி ஆகியோர் டார்ச்சர் செய்தனர், அவர்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்கள் இருந்தனர்” என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. பழனியை டார்ச்சர் செய்தது சென்னை கவுன்சிலர்களா, திருவாரூர் கவுன்சிலர்களா என்று தெரியவில்லை… போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

– சே –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *