ஆழ்ந்த இரங்கல்! மறைந்தார் சீனியர் ஜர்னலிஸ்ட் சுப்பிரமணி…

மூத்த பத்திரிகையாளர் ஆரணி சுப்பிரமணி உடல் நல குறைவால் காலமானார். அன்னாரின் இறப்பால் வாடும் உற்றார் உறவினர் ஊடக தோழமைகள் நட்புகள் அனைவருக்கும் ‘மெட்ராஸ்குரல்’ இணைய தளத்தின் சார்பில் ஆறுதலும் தேறுதலும்…

பத்திரிகையாளர் திரு.பொன். கோ. முத்துவின் அஞ்சலி கட்டுரை…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) மூத்த பத்திரிகையாளர். தினமலர், தினகரன் ஆகிய முன்னணி நாளிதழ்களின் செய்தியாளராக பணிபுரிந்த போது அதிகாரவர்க்க அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும், தனது எழுதுகோலால் துகிலுரித்து துணிச்சலுடன் காட்டியவர். செய்தியின் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பதில் வல்லவரான திரு.சுப்பிரமணி, பல்வேறு தரப்பினரின் நல் மதிப்பை பெற்றவர். அண்மைக்காலத்தில், ‘கும்மிடிப்பூண்டி தொகுதிமலர்’ ஆசிரியர் ஆகவும், ‘முதல் ஓசை’ நாளிதழின் செய்தியாளராகவும் பணியாற்றி வந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை காலமானார். அவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். அவரது மறைவுக்கு சக பத்திரிகை நண்பர்கள் இரங்கல் தெரிவித்தனர். இன்று காலை 10 மணி அளவில், பூர்விக மண்ணான ஆரணியில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ந.பா.சேதுராமன் (ஆசிரியர்-மெட்ராஸ்குரல்)

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *