போற்றுதல் பணி|போலீசாருக்கு வெகுமதி-பாராட்டு|

போற்றத்தக்க காவல் பணியை மேற் கொண்ட காவலர்களை நேரில் வரவழைத்து பாராட்டியும், வெகுமதி அளித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ் உற்சாகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல்துறை செய்திக்குறிப்பு விபரம் ÷

சென்னை பெரியமேடு பகுதியில் சுற்றி திரிந்த தூத்துக்குடியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினர், சென்னை பெருநகர காவல், G-2 பெரியமேடு போக்குவரத்து காவல் நிலைய முதல்நிலை பெண் காவலர் V.கனகவள்ளி, 25.08.2026 அன்று காலை, பெரியமேடு, டிமலஸ் பாயிண்டிலும், பெண் காவலர்கள் S.கோசலாதேவி, R.ராஜபிரியா மற்றும் வினோதினி ஆகியோர் அருகிலுள்ள பாயிண்டிலும் பணியிலிருந்தபோது, சற்று உடைகள் கலைந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல சுமார் 30 வயது பெண்மணி அவ்வழியே சென்றபோது, காவலர் கனகவள்ளி அப்பெண்ணிடம் பேசியபோது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல ஆங்கிலத்தில் பேசியபோது, அருகிலிருந்தவர்களிடம் உதவி கேட்டு ஒரு உடையை அப்பெண்ணின் மேலே போட்டு, விசாரித்து கொண்டிருந்தபோது, அப்பெண் சென்றுவிட்டதாகவும், மீண்டும் அதே பெண் அவ்வழியே சென்றபோது, அவரை விசாரித்ததில் அவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் என தெரியவந்து, விசாரித்து அவரது தந்தையின் செல்போன் எண்ணை பெற்று அவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்து, மறுநாள் (26.08.2026) அப்பெண்ணின் தந்தை வந்தபோது, அவரிடம் விசாரித்து அப்பெண்ணை ஒப்படைத்துள்ளனர். விசாரணையில் அப்பெண் சிகிச்சைக்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் சொந்த ஊரிலிருந்து சுமார் 2 நாட்கள் முன்பு இரயிலில் ஏறி சென்னை வந்துள்ளதும், மகளை காணாமல் அவரது தந்தை பல இடங்களில் தேடி வந்ததும் தெரியவந்தது.

கொடுங்கையூர் காவல் நிலைய 4 வெவ்வேறு கொலை வழக்குகளில் முக்கிய சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு விசாரணை விரைவாக முடித்து 6 குற்றவாளிகளுக்கு ஆயுள்தண்டனை கிடைக்க சிறப்பாக பணியாற்றிய நீதிமன்ற அலுவல் மேற்கொள்ளும் தலைமைக் காவலர், (P-6 கொடுங்கையூர் காவல் நிலைய நீதிமன்ற அலுவல் பணி) S.லஷ்மணன் என்பவர் இக்காவல் நிலைய வழக்குகளில் நீதிமன்றத்தில் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, வழக்குகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு கொலை வழக்கில் விஜயகுமார், 2017ம் ஆண்டு கொலை வழக்கில் கார்த்திக், 2021ம் ஆண்டு கொலை வழக்கில் துக்னா சாகர், 2023ம் ஆண்டு கொலை வழக்கில் மணிகண்டன், சுரேஷ், வெள்ளை மணிகண்டன் என மேற்கண்ட 4 வழக்குகளில் 6 நபர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் கடந்த ஒரு வருடத்தில் ஆயுள்தண்டனைகள் வழங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் அ.அமல்ராஜ், மேற்கண்ட 2 சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்த G-2 பெரியமேடு போக்குவரத்து காவல் நிலைய 4 பெண் காவலர்கள் மற்றும் P-6 கொடுங்கையூர் காவல் நிலைய தலைமைக் காவலர் லஷ்மணன் ஆகியோரை, (02.09.2026 அன்று) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

சேது

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *