ரெயில்வே: கற்கள் வீசி குழுவாக தாக்குதல்!

சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் இரு தரப்பு இளைஞர்கள், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

சென்னை பெரம்பூர் லோகோ ரெயில் நிலையத்தில் காலை 9 மணியளவில் இளைஞர்கள் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக வந்த இளைஞர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். மேலும் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரெயில்கள் மீதும் அந்த இளைஞர்கள் கற்களை வீசினர். இதனால் ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அங்கிருந்து பயத்தில் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ரெயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பாக மோதலில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு புறநகர் ரெயில்களில் ஏறி தப்பிச் சென்றனர், இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் பயணிகளா, அல்லது இரு வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில் நிலையம் மற்றும் புறநகர் ஓடும் ரெயில்களில் அடிக்கடி ஏற்படும் இது போன்ற சம்பவங்களால் பயணிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். ரெயில் நிலையங்களுக்கும் பயணிகளான பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு மோதலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *