மழைக்காளான் சாப்பிட்டதால் மயங்கிய தொழிலாளிகள்|

மழையில் முளைத்த காளானை பறித்து சமைத்து சாப்பிட்ட விவசாயக் கூலி தொழிலாளர்கள் 12 பேர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட, பெரிய கரும்பூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான. விலை நிலங்களில் நாற்று நடும் பணிக்காக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளிகள் ஏராளமானோர் வந்துள்ளனர், விவசாயி ஒருவரது நிலத்தில் நேற்று பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயல்வெளியின் ஓரத்தில் புதுமழையில் முளைத்த காளானை. அங்கு நடவு நடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிலர் பறித்து அதனைக் கொண்டு சென்று சமைத்த பின்னர் தனது குழுவினருடன் சாப்பிட்ட சில நிமிடங்களில் அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். சக தொழிலாளர்கள் கிராம மக்களின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆறு பேர் உள்ளிட்ட 12 தொழிலாளர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், நாற்று நடும் பணிக்காக வந்த இடத்தில் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானை பறித்து சமைத்து சாப்பிட்டு 12 விவசாய கூலி தொழிலாளிகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *