சென்னை டூ திருப்பதி சென்ற கார் தீ பிடித்தது… பக்தர்கள் தப்பினர்!

சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற கார், திடீரென தீப்பற்றியது. சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், தனது நண்பர்களுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தனது காரில் சென்று கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் நகரி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதன் இஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜூம் அவர் நண்பர்களும் அவசர அவசரமாக காரை விட்டு கீழே இறங்கினர். நொடிப்பொழுதுகூட தாண்ட வில்லை. கார் வேகமாய் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போதிலும், கார் முற்றிலுமாக சேதம் அடைந்தது. நகரி போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார், தீ பற்றி எரிந்த போது சாதுரியமாக அதிலிருந்து கீழே இறங்கியதால் சென்னை வாசிகள் நல்வாய்ப்பாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *