“நீட் – 2024” கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பார்வை…

“நீட் -2024” குறித்து ஆய்ந்தறிய பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் கல்வியாளர் திரு. பிரின்ஸ் கஜேந்திரபாபு மற்றும் கல்வியாளர்கள், பொதுமக்கள், மாணவர்களை எதிர்வரும் 7-ஆம் தேதி கோவைக்கு வரும்படி அந்த அழைப்பில் கூறப்பட்டுள்ளது.


“கற்றல் செயல்பாட்டிற்கு ‘நீட்’ பெரும் கேடு விளைவித்துள்ளது. நீட் 2024 கேள்வித் தாள் அதை தெளிவாக புரிய வைத்துள்ளது. மேல்நிலைப் பள்ளி வகுப்பறைக் கற்றலுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை படக் காட்சியுடன் (Slides) விளக்கிட, 07.01.2025 (செவ்வாய்கிழமை) காலை 10 மணிக்கு கோயம்புத்தூர், பேரூர் ஆதினம், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி வளாகத்தில் ‘நீட் 2024 கேள்வித்தாள் முன்வைக்கும் சவால்கள்’ (NEET 2024 Question Paper: A Challenge to Education) என்ற பொருண்மையில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கத்திற்கு பெருமளவில் பொதுமக்கள் வருகை தந்து ‘நீட்’ உருவாக்கி உள்ள சிக்கல் குறித்து தொடர் உரையாடலை வெகு மக்கள் நிகழ்த்த உதவிடும்படி வேண்டுகிறோம். உரையாடல் மட்டுமே தெளிவுகளைத் தரும். மக்களுடன் தொடர் உரையாடல் நிகழ தங்களின் வருகை பெரும் உதவியாக இருக்கும். (Your presence will help in further dissemination) ” என்று கல்வியாளர் திரு. பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (தொடர்பு எண்: 94456 83660) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *