சிறுவாபுரி கோயில் நிலத்தில் பொதுமக்கள் வீடு!

சிறுவாபுரி திருமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் நிறையவே வருவதால் ஏற்படும் நெருக்கடி அதிகம். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்கான நடவடிக்கையை  இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்கனவே மேற்கொண்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டனர். அதன்படி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம் முன்னிலையில், காவல் துறையினரின் பாதுகாப்புடன், ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆறு வீடுகளை; ஜேசிபி இயந்திரம் மூலம் இடிப்பதற்காக சென்றனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்து கட்டிட உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் சமாதானம் செய்து அனுப்பினர். இதையடுத்து ஆறு ஆக்கிரமிப்பு வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளினர், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மேலும் 4 கட்டிட உரிமையாளர்களுக்கு வேறு இடத்தில் வீட்டுமனையும், வீடு கட்டுவதற்காக அரசு சார்பில் 5 லட்ச ரூபாய் நிதியும் வழங்குவதாக தெரிவித்தனர்.
எஞ்சியுள்ள இரண்டு பேரில் ஒருவர் அரசு ஊழியர் என்பதாலும், மற்றொருவர் கட்டிட உரிமையாளர் மற்றும் புதிதாக சொந்த வீடு கட்டி வருவதாலும்; அரசு தரப்பில் அவர்களுக்கு இந்த சலுகை மறுக்கப் பட்டுள்ளது.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *