காஞ்சிபுரம் வசூல்ராஜா படு கொ**லை- பின்னணி!

காஞ்சிபுரம் பகுதி பிரபல ரவுடி வசூல்ராஜா என்கிற ராஜா வயது 39. மாவட்ட காவல் நிலையங்களில் இவர்மீது கட்ட பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொ**லை போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன. மொத்தம் 27 வழக்குகள். அதில் 4 கொ**லை வழக்குகள்.

இன்று (11.03.2025) மதியம் திருகாளிமேடு ரேஷன் கடை முன்பு மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசி, வசூல்ராஜா படு கொ**லை செய்யப்பட்டார். அங்கிருந்த குடியிருப்பு வாசிகள், ஏதோ வெடி சத்தம் கேட்பதாக வெளியே வந்து பார்த்த பொழுது ஒருவர், அங்கிருந்து வீச்சரிவாள் எடுத்துக் கொண்டு ஓடியதாக தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் ஒரு துக்க நிகழ்வு நடைபெறுவதால் அங்குதான் வெடி வெடிக்கிறார்களோ என கருதியதாக பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கத்தியுடன் 2009-ல் வாழ்க்கைப் பயணத்தை தொடங்கிய வசூல்ராஜா, அந்தப் பாதையை விட்டுவிலகி சில ஆண்டுகளுக்கு முன்னே கழிவுநீர் ஊர்தி ஒப்பந்தப்பணியை மேற்கொண்டு இருந்த நிலையில் இப்படியாக முடிந்துள்ளது வாழ்க்கை.

காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் எஸ்.பி.கள், அண்ணாதுரை மற்றும் மார்ட்டின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

பஞ்ச் – பாலா

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *