திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், கரிகலவாக்கம் பகுதிக்கு தமிழ்நாடு இளைஞர்நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் வருகை தந்தார்.
தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்- சென்னை எல்லை சாலை திட்டத்தின் கீழ் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழி சாலை (பிரிவு-2) வரை ரூ.1,540 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை பணிகளை அப்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு உடனடியாக கொண்டு வரும்படி; துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்வின் போது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலர் மரு. தாரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ், முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் சா. ஜெகத்ரட்சகன்,
எம்.எல்.ஏ.க்கள், ஆவடி சா.மு.நாசர், (முன்னாள் அமைச்சர்) திருத்தணி எஸ்.சந்திரன், டி.ஜெ. கோவிந்தராஜன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்) மரு.என்.ஒ.சுகபுத்ரா, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைமை பொறியாளர் டி. இளங்கோ, கண்காணிப்பு பொறியாளர் ஜி.தட்சிணாமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக பணியாளர்கள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பொன்.கோ.முத்து