கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்…

சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி திருக்கோயிலில் 19-ஆம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டது. உற்சவரான ராதா கிருஷ்ணாவுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

கோ- பூஜை முடித்து யாகத்துடன் தொடங்கிய விழாவில் ராதா, கிருஷ்ணா விக்ரகங்களுக்கு பால், தயிர், இளநீர், தேன் மற்றும் நறுமண பொருட்களை வைத்து பக்தர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் ராதா கிருஷ்ணருக்கு ஆராதனை காண்பிக்கப்பட்டது. உறியடி நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதிகாலை முதல் மாலை வரை அகண்ட நாமம், ஹரி நாம கீர்த்தனை நடைபெற்றது.

கிருஷ்ணஜெயந்திவிழாவில்…

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *