நீரேற்று நிலையம்- பூங்கா! அமைச்சர் மா.சு.திறந்து வைத்தார்.

சென்னை பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் -13, வார்டு 176 -ன் மாமன்ற உறுப்பினர் வே.ஆனந்தம் தொகுதி மேம்பாட்டு நிதி- நகர்ப்புற பசுமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீரேற்று நிலையம்-பூங்கா உருவாக்கம் நேற்று அமைந்தது.

ரூபாய் 35 லட்சத்தில் கட்டமைக்கப்பட்ட நீரேற்று நிலையம் மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 143.60 லட்சத்தில் உருவாக்கப்பட்ட பூங்காவை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்ரமணியம் திறந்து வைத்தார். தென்சென்னை எம்.பி., முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி  துணைமேயர் மு.மகேஷ் குமார், மண்டலகுழுத் தலைவர் இரா.துரைராஜ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், தி.மு.க.வினர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு பள்ளி மாணவிகள் புகைப்படம் வழங்கினர்.

பிரீத்தி எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *