முதலமைச்சர் தொடங்கிய காலை உணவு திட்டம்…

 தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான  காலை உணவு திட்டம்; திருப்போரூர் தொகுதி – திருவிடந்தை ஊராட்சியில் முதலமைச்சரால் இன்று காலை காணொளி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அதேபோல் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் இதே நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டாது.

அமைச்சர் தா.மோ. அன்பரசன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ் எஸ் பாலாஜி (விசிக), திருப்போரூர் (வ) ஒன்றிய செயலாளர்- ஒன்றிய பெருந்தலைவர் எல். இதயவர்மன்,

திமுக த.செ.கு.உறுப்பினர் ஜி.சி.அன்புசெழியன், திருப்போரூர் (தெ) ஒ.செ. பையனூர் சேகர், வடக்கு ஒ.து.செ வெண்பேடு ரமேஷ்,  ஊராட்சி மன்றத் தலைவர்  ராணி எல்லப்பன், திருப்போரூர்  தொகுதி ஐ.டி.விங் ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன்,  துணைத் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ -மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

சதாம்உசேன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *