Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

அட்மிட் ! பதவி நீக்கம்? அமைச்சர் கைது பின்னணி…

உருண்டு புரண்டு கத்தி கதறியழுது தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற ஆள் இல்லை செந்தில்பாலாஜி. திடமானவர். அமலாக்கத்துறை சோதனைக்குப் பின் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதுதான் கதறி அழுகிறார். அவமானம், அச்சுறுத்தல் காரணமான அழுகையாக ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி….

பொது ‘மின் தகன மேடை’ அமைப்பு! ஒரு பிரிவினர் சாலைமறியல்…

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஜெயஸ்ரீ நகரில், 54 சென்ட் பரப்பளவில், ஒரு இ(சு)டுகாடு இருக்கிறது. ஒரு சமூகத்தவர் மட்டும் பல ஆண்டுகளாக அந்த இடுகாட்டை பயன்படுத்தி வந்ததாக சொல்லப் படுகிறது. இந்நிலையில், மற்ற பிரிவினரின் உடல்களையும் தகனம் செய்யும் வகையில் பேரூராட்சி….

முதியோர் ஓய்வூதியம்!அதிகாரிகள் குளறுபடி… பிச்சை எடுக்கும் மூதாட்டி !

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். பங்கஜத்தின் வயதும் வறுமையும் புகைப்படத்தை பார்த்தாலே போதும், சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கணவர் சுப்ரமணி, பங்கஜத்தின் இளமைக்காலத்திலேயே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். பிள்ளைகள் இல்லை. உடம்பில் உழைக்க தெம்பு இருந்த வரையில்….

கன்னத்தில் முத்தமிட்டால்…

பெண் போலீசின் கன்னத்தை செல்லமாய் கிள்ளி முத்தமிட்டதாக எழுந்த புகாரில் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. சென்னை சூளைமேடு காவல் நிலைய சிறப்பு (க்ரைம்- எஸ்.எஸ்.ஐ.) உதவி ஆய்வாளர் பிரபாசங்கர். அதே காவல் நிலையத்தில் கணினிப் பிரிவில் பணியாற்றும்….

என்ஜின் பழுது- சென்னை புறநகர் ரயில்கள் தாமதம்…

ஆந்திர மாநிலம் பித்ரகுண்டாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த புறநகர் தொடர் வண்டியின் (ரயில்) இன்ஜின் கவரப்பேட்டை அருகே திடீரென பழுதானது. தகவலின் பேரில் அங்கு விரைந்த தொடர்வண்டி பராமரிப்பு பொறியாளர்கள், அவசரப் பராமரிப்பு பணி மூலம், அந்த தொடர்….

“பாகை- 360 நட்சத்திரம்-27” பரிகாரம் சொல்லும் ஸ்ரீனிவாசன்

(பரிகாரம்-மற்றும் பகுதி- 2)வானத்தில் எண்ணற்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட கிரகங்கள் மட்டுமே மனித வாழ்க்கையுடன் தொடர்பு வைத்துள்ளன என்று நம் முன்னோர்கள் கண்டுபிடித்து, அதனை 360 பாகைகளில் எங்கு இருக்கிறது என்பதையும் கணக்கிட்டு; இந்த நாளில், இந்த பாகை….

போலீஸ் டி.எஸ்.பி. கள் 16பேருக்கு பதவி உயர்வு…

தமிழ்நாட்டில் போலீஸ் டி.எஸ்.பி.களாக பணியாற்றி வரும் 16 காவல் அதிகாரிகளுக்கு கூடுதல் போலீஸ் எஸ்.பி.(ஏடிஎஸ்பி) யாக பதவி உயர்வை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. எம்.சிவனுபாண்டியன், எம். முத்துக்குமார், ஏ.மணிகண்டன், கே.அசோகன், ஜி.மதியழகன், ட்டி.காந்தி, எம்.ரமேஷ், எம்.என். விஷ்வநாத் ஜெயன், எஃப்…..

உருவாகிறது அலையாத்தி காடுகள்…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த புழுதிவாக்கம்- சதுப்பு நிலப் பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ‘அலையாத்தி காடுகள் மீட்டுருவாக்குதல்’ திட்டத்தின் கீழ் அலையாத்தி மரக்கன்றுகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நடவு செய்து தொடங்கி வைத்தனர்…..

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 4டன் ரேசன்அரிசி பறிமுதல்….

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்குந்து (மினி-லோடு வேன்) ஒன்றை நிறுத்தி சோதனை இட்டபோது அதில் 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது….

சென்னை டூ திருப்பதி சென்ற கார் தீ பிடித்தது… பக்தர்கள் தப்பினர்!

சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்ற கார், திடீரென தீப்பற்றியது. சென்னையைச் சேர்ந்த சுந்தர்ராஜ், தனது நண்பர்களுடன், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தனது காரில் சென்று கொண்டு இருந்தார். ஆந்திர மாநிலம் நகரி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதன்….