Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

மாணவர்களின் ஆடை விவகாரம்! சுற்றறிக்கையை திரும்பப்பெற்றது பெரியார் பல்கலை நிர்வாகம்…

பட்டமளிப்பு விழாவிற்கு வரும் மாணவர்கள் ஆடை குறித்து பெரியார் பல்கலை அனுப்பிய சுற்றறிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் பல்கலை நிர்வாகம் (பதிவாளர்) அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறது. பெரியார் பல்கலை நிர்வாகத்தின் ஆடை நிறக் கட்டுப்பாடு குறித்து, ‘தமிழ்நாடு பொதுப்….

பொன்னேரி கோர்ட் எல்லை விவகாரம்! வழக்கறிஞர்கள் போராட்டம்…

திருவள்ளூர் மாவட்ட, பொன்னேரி நீதிமன்ற வட்டத்தில் இருந்த 13 கிராமங்களை, மாதவரம் தாலுகா நீதிமன்றத்தில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் இருந்த 13 கிராமங்களை தமிழக அரசு….

வானியலுக்கும் ஆன்மிகத்துக்கும் இதுதான் தொடர்பு…

(தொடர் பதிவு – 5) என்னுடைய முந்தைய 4 பதிவுகளில் (கட்டுரைகள்) பரிகாரங்கள் எப்படி பலன் தருகின்றன என்பதை பார்த்தோம். ஒருவருக்கு வாழ்க்கையில் ஏற்படும் தடைகள், தாமதங்கள் அது எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும்; எந்த கிரகம் எந்த விதமான பாதிப்புகளை….

கட்டாய வசூல்! ‘யு’ டர்ன் அடைத்து அநியாயம் செய்யும் சுங்கச்சாவடி…

சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் ‘யு’ டர்ன் அடைத்து விட்டு கட்டாய சுங்க வரி வசூலிப்பு கண்டித்து சரக்குந்து (லோடு லாரி) உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டம் என குதித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில்….

“ஆட்சியை கலைத்தால் மக்களுக்கு மகிழ்ச்சி” – டி.ஜெயகுமார்

சென்னை புழல் பகுதியில் புதிதாக அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ள இ-சேவை மைய கட்டிடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் கலந்து கொண்டு, இ சேவை மையத்தை திறந்து வைத்து, பொது மக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.பின்னர்….

பக்ரீத்: ரூ. 6 ஆயிரம் விலைபோன ஆடுகள் !

சென்னை மாதவரத்தில் உள்ள ஆட்டு சந்தையில், விற்பனைக்காக செம்மறி ஆடுகள் குவிந்து வருகிறது. இம்மாதம் 28ஆம் தேதி இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்தும், ஏராளமான செம்மறி ஆடுகள்….

மாயம் ! 450 லாரி டயர்கள் எங்கே?

சென்னை ஒரகடத்தில் ஜேகே என்ற தனியார் வாகன வட்டகை (லாரி டயர்கள்) தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து 2023 பிப்ரவரி 9-ஆம் தேதி பிரேசில் நாட்டிற்கு கப்பல் மார்க்கமாக ஏற்றுமதி செய்ய பெட்டக சரக்குந்து (கன்டெய்னர் லாரி) ஒன்றில் 30 லட்ச….

நிழல் கிரகங்கள் என்ன செய்யும்?

(பரிகாரம் –தொடர் பதிவு – 4) கிரகங்களின் உச்சம்-நீச்சம் – பாதிப்புநவகிரகங்களில் ஓவ்வொரு கிரகத்திற்கும் உரிய பொருட்களை கண்டு பிடித்து உலோகம், சமித்து, நிறம், வஸ்திரம் என நம் முன்னோர்கள் பட்டியலிட்டு உள்ளனர். இவை எல்லாமே அந்த குறிப்பிட்ட கிரகங்களின் புற….

நாதியற்றுப் போனதா தூய்மைப் பணியாளர்கள் வாழ்வு? !

ஆணையம் திட்டி விட்டது. ஆணையத் தலைவர் நேரில் வந்து பார்த்து விசாரணை நடத்தி விட்டு, ‘இது மோசமான செயல்’ என்று அவரும் கடிந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சில வாரங்கள் முன்புதான் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த விபரமான அறிக்கையை….

தீவிர அரசியலில் நடிகர் விஜய்…

சென்னை நீலாங்கரை பகுதியில் நடிகர் விஜய் செய்திருந்த கல்வித் திருவிழா நாடு முழுவதும் பேசப்படும் விழாவாக ஆகியிருக்கிறது. 10 மற்றும் 12- ம் வகுப்புகளில் முதல் மூன்று இடத்திற்கான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு பத்திரமும், உதவித் தொகையும் என தொகுதிக்கு….