Author: admin

ந.பா.சேதுராமன் B.sc (psy) M.A.(jmc) டிசம்பர் 5- 1984- ல் மாணவப் பருவத்தில் செய்தியாளராக தொடக்கம். பின்னர், தினகரன் நாளிதழ் (1991-2004) போலீஸ் செய்தி/ ஜூனியர் போஸ்ட்/தமிழன் எக்ஸ்பிரஸ்/தினசரி/ நக்கீரன்/விகடன்/பாலிமர்/நியூஸ் 7தமிழ்/தற்போது யூடியூபர்- விடுதலை பத்திரிகையாளர் (Freelancer) என பயணம் தொடர்கிறது. வேட்டை நாடோடிகள் (க்ரைம்), சோப்பு சீப்பு கண்ணாடி (கவிதை) இதழியல் இனி (கட்டுரை) நூல்களின் ஆசிரியர்/ கவிஞர்/ எழுத்தாளர்/ மரபுவழிமூலிகை ஆய்வாளர்/ கலந்தாய்வு (திரைத்துறை) பணியும்...

ஆளுநரை வரலாறு மன்னிக்காது…

தோழர் என். சங்கரய்யா அவர்களுக்கு செவ்வணக்கம்! வீர வணக்கம். இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் விடுதலை பெற்ற பின்னர் சமூக, பொருளாதார சமத்துவத்திற்காக தன் வாழ்நாள் முழுக்க பாடுபட்ட தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் தான்….

மக்கள் சேவையில் ‘டாக்டரேட்’ தோழர்…

வாழ்நாளெல்லாம் போராட்டம் சிறைவாசம் என்று மக்களுக்காகவே ஓடித் திரிந்த தோழர் என்.எஸ். (102) அவர்கள், உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலை இறந்தார். பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாது என்பார்களே அப்படியான புகழுடல், 1921-ஜூலை 15 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் மண்ணில்….

தெலங்கானா தீவிபத்தில் பலி 9- படுகாயம் 25…

தெலங்கானாவில் தரைதளத்திலிருந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ நான்கு மாடிகளுக்கும் பரவியதில், தீயில் கருகி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தெலங்கானா மாநிலம் ‘நம்பள்ளி’ யில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது…..

சௌகார்பேட்டை சாம்ராஜ்யம் !கலப்பட இனிப்பு தீபாவளி…

உலகத்தரத்துக்கு எதிர்ப்பதமான இனிப்பு உணவை தயாரிப்பதில் சென்னை சௌகார்பேட்டை ஏழு கிணறு முல்லாசாஹிப் தெருவில் இருக்கும் சில கடைகள் புகழ்பெற்று விளங்குவதை நேரில் போனால் பார்க்கலாம். பிரபல இனிப்பு தயாரிப்பு நிறுவன பெயர் கொண்ட நிறுவனத்தின் ஊழியர்கள், சுகாதாரமற்ற முறையில் இனிப்புகளை….

சென்னை புறநகரில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை…

தமிழகத்தில் 6 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரி, சென்னை புறநகர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இப்படியான தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பங்களாதேஷ், பர்மா, மியான்மர் நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும்….

ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கிய ‘நாம் தமிழர்’ …

ஸ்ரீபெரும்புதூரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து ஆயுத பூஜை கொண்டாட அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் சீருடை வழங்கி மகிழ்ந்தனர் நாம் தமிழர் கட்சியினர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம், ராஜீவ் காந்தி நினைவகம், தேரடி, சிவன்தாங்கல், நெமிலி ஜங்ஷன்….

“மேல்முறையீடு செய்தாலும் ஓபிஎஸ் தோற்பார்” – பொன்னையன்…

பொன்னேரியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், “ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும் எடப்பாடியே வெற்றி பெறுவார். எந்த வழக்கிலும் ஓபிஎஸ் மேல் முறையீட்டில் வெற்றி பெறவில்லை” என பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை….

மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள்சிறை !

ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனையோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(41). கடந்த 19.11.2014 அன்று மதுபோதையில்….

மகா மதுரகவி வீ.வே.முருகேச பாகவதர் விழா…

மகா மதுரகவி வீ.வே. முருகேச பாகவதரின் பேரன் என்பதே தெரியாமல்தான் இவ்வளவு காலம் (Sunderesan Kumaresan) அண்ணன் சு.குமரேசனுடன் பழகி வந்திருக்கிறேன். சென்னை பல்கலைக்கழகத்தின் பவளவிழா அரங்கில் முனைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மொத்தமாய் கூடிநின்று பாகவதரின் ‘வாழ்த்துப்பா மலர்கள்’ பாகம் 1-ஐ….

புறநகரில் மழைக்கால பாதுகாப்பு ஏற்பாடுகள்…

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபு சங்கர், புழல் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட திருவள்ளூர்….