எதிர்வரவுள்ள தேர்தல் களத்தில் முதல் ஆளாக அதிமுக இறங்கியுள்ளது. ‘பூத்’ கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் போடுவது வரை களப்பணியை முடுக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்டச்செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி, பொன்னேரி சட்டமன்றத் தொகுதிகளின் அதிமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணி தொடர்பாகவும், பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் மற்றும் அவர்களுக்கு அளிக்க வேண்டிய பயிற்சி தொடர்பாகவும் அதிமுக மாவட்டச் செயலாளர் சிறுணியம் பலராமன் ஆலோசனைகளை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்துக்கே தேர்தல் வந்தாலும் அதற்கேற்ப களப்பணி ஆற்றும் வகையில் தொண்டர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு அப்போது அவர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பானு பிரசாத், சுமித்ரா குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொன்.கோ.முத்து