
தமிழக வெற்றிக் கழகத்தின்
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் வாழ்த்துக்களுடன் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பா.விஜயராஜ், அடிப்படையிலேயே சமூக அக்கறையும், சமூக பொறுப்பும் நிரம்பிய துடிப்பான இளைஞர். உள்ளூர் மீனவர்கள் தொடங்கி மாணவர்கள் வரை விஜயராஜ் நட்புவட்டத்தில் இருக்கிறவர்கள்.

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் சி. வி.தீனா (எ ) தினகரன், திருப்போரூர் எம்எல்ஏ பா.விஜயராஜ் ஒருங்கிணைப்போடு, திருப்போரூர்-செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள தவெக திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்தை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான என்.ஆனந்த், மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி.சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

நிகழ்வின் போது அமைச்சர் ஆனந்த், சட்ட மன்ற உறுப்பினருக்கான இருக்கையின் பெருமையை எடுத்துரைத்து சமஉ விஜயராஜை அவருடைய இருக்கையில் அமரவைத்தார். அப்போது சமஉ விஜயராஜூக்கு செங்கோலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்,
செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் எஸ். தியாகராஜன், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம். எஸ்.பாலாஜி (எ) மணிகண்டன் , செங்கல்பட்டு தெற்கு (கிழக்கு) மாவட்டச்செயலாளர் மோகன்ராஜா, செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் வி.குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், எஸ்.ஆர்.எஸ்.வினோத் கண்ணன், தாழம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் டி தேவசித்தம் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, சார்பு அணி நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சுகுமாரன்

