
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆலோசனைப்படி
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா( 03/06/2026) புதன்கிழமை காலை கேளம்பாக்கம் -கோவளம் சாலை சந்திப்பில்

திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான எஸ் ஆர் எல் இதயவர்மன் தலைமையில் கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ராணி எல்லப்பன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நிகழ்வில், கலைஞரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து , மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும், கோடை காலத்திற்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தலையும் திறந்து வைத்து மூத்த திமுக முன்னோடிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தனர்.
.
நிகழ்ச்சியில் தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் வெண்பேடு இ.ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி.சி.அன்பு செழியன், ஒன்றிய கழக நிர்வாகிகள்,இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, கழகத்தின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
சுகுமாரன்
