தமிழ்ப்பற்றாளர், காயிதே மில்லத் நினைவுகள் : மல்லைசத்யா

புயலின் முகங்களே பூகம்பத்தின் விதைகளே வணக்கம். நலம் வாழிய நலனே.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள நினைவிடத்தில் 05/06/2026 வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் கழகத்தின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் போரூர் ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில்; தென்சென்னை மாவட்ட செயலாளர் செல்வப்பாண்டியன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் திராவிட ரத்னா இளவழகன், வடசென்னை மாவட்ட செயலாளர் GRP ஞானம், மாநில செயலாளர் ஊனை பார்த்திபன், மாநில செயலாளர் KVM பாலசுப்பிரமணியம், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வளையாபதி, திருவள்ளுர் மாவட்ட செயலாளர் கெளரி குமார், தாம்பரம் மாநகர மாவட்ட செயலாளர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலையில் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளோம்

அன்பின் தோழமைகளே கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் சாஹிப் அவர்கள் தலைச்சிறந்த தேசபக்தர். இந்திய சீன இந்திய பாக்கிஸ்தான் போரின் போது தன் பெயரையும் தன் மகன் மியாக்கான் அவர்களின் பெயரையும் சேர்க்க சொல்லி பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு கடிதம் எழுதியவர். 1946 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பணியாற்றியவர்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கேரளா மாநிலம் மஞ்சேரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தபாலில் அனுப்பி விட்டு வாக்கு சேகரிக்க செல்லாமலேயே வெற்றி வாகை சூடிய மக்கள் தலைவர் காயிதே மில்லத் அவர்கள். தொடர்ச்சியாக மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராக இருந்தபோது ஆட்சி மொழி குறித்து விவாதம் நடந்த போது இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கக் கூடிய அனைத்து தகுதிகளும் ஒருங்கே பெற்ற உலகின் பழமையான செம்மொழி தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு என்று வாதாடிய மொழிப் பற்றாளர் காயிதே மில்லத் சாஹிப் அவர்களின் 130 வது பிறந்தநாள் 05/06/26 வியாழக்கிழமை

அதுசமயம் சென்னை மண்டல திராவிட வெற்றிக் கழக நிர்வாகிகள் அணிகள் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக செயல்மாமணிகள் தோழர்கள் பெரும் திரளாக பங்கேற்று சிறப்பித்திட அன்புடன் வேண்டுகின்றேன், நன்றி.

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில், மல்லை சி ஏ சத்யா (தலைவர்
திராவிட வெற்றிக் கழகம்)
04/06/2026

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *