
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவளம் ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் மாணவர்களை ஊக்குவித்து பரிசுகள் வழங்கி மனத்திருப்தி அடைகிறவர், எஸ்.டி.எஸ். பவுண்டேசன் நிறுவனர் ஜா. சுந்தர். இவருடைய ஒரே குறிக்கோளாக, “அனைவருக்கும் கல்வி எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற தாரக மந்திரமே” இருப்பதை காணமுடிகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கிற கோவளம் பகுதி ‘மீனவ’ குடும்பத்துப் பிள்ளைகள் பலரை, கல்வி உதவியின் மூலம், ஜா.சுந்தர் கைதூக்கி விட்டதால் பலர் வெளிநாடுகளில் உயர் பதவிகளில் உள்ளனர். சிலர், விளையாட்டுத்துறை சாதனை வீரர்களாகவும், உள்ளனர்..

சில வருடங்களுக்கு முன்பு கூட கோவளம் பகுதி இளைஞர் ஒருவருக்கு இமயமலை சிகரத்தை அடைய தேவையான அத்தனை உதவிகளையும் செய்து கொடுத்தார். அந்த இளைஞரும் சிகரத்தை அடைந்து கோவளம் ஊராட்சிக்கும் இந்திய திருநாட்டுக்கும் பெருமை சேர்த்தார்.
அப்போதைய விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அந்த இளைஞரை பாராட்டி கௌரவித்தார்.

கோவளம் ஊராட்சியில் STS தொண்டு நிறுவனத்தின் மூலம் நான்காவது ஆண்டாக கோவளம் ஊராட்சியில் உள்ள LKG முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு School Bag, Uniforms, Lunch box, geometry box, Lunch towel, Water bottle, exam pad, குடை ஆகியவற்றினையும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு College bag, Dairy note, கல்வி ஊக்கத் தொகையாக 20000, 10000 மற்றும் 8000 ரூபாய் வழங்கியது பலரது பாராட்டைப் பெற்ற நிகழ்வாக அமைந்தது.

மேலும் ஊராட்சியில் வசிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத் தொகையும் அப்போது வழங்கப்பட்டது. அதேபோல் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

மேலும் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் இரண்டு பள்ளிக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஊராட்சியில் உள்ள மக்களை பெருமைப்படுத்தும் விதமாக Proud of kovalam, Future of kovalam, Best school HM, Best teacher, best kabadi team, Best kabadi player, Best Silambam master ஆகிய விருதுகள் வழங்கி அனைவருக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் பெருமைக்குரிய செய்தி என்னவென்றால் வழங்கப்பட்ட ஊக்க தொகையினை மாணவர்களின் வங்கி கணக்கில் மேடையிலேயே உடனடியாக ஜி. பே மூலம் வழங்கப்பட்டதுதான்…
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இசை அமைப்பாளர், நடிகர் மற்றும் பன்முக தன்மை கொண்ட ஹிப் -ஹாப் தமிழா ஆதி, ஸ்ரீ சிட்டி நிர்வாக இயக்குனர் ரவீந்திரா சன்னா ரெட்டி, கேட்லிஸ்ட் ப்ராபர்ட்டி டெவெலப்பர் பாலாஜி, ப்ரொவிஸ் கார்பொரேட் சர்வீஸ் மற்றும் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஸ்ரீராம், சி.என். ராமதாஸ் பவுண்டேசன்
கிரிஷ் ராமதாஸ் & கௌதம் ராமதாஸ், ஸ்ரீனார் எலக்ட்ரானிக்ஸ் இயக்குனர் பிரசாந்த் மற்றும் டி.டி குரூப் &வேல்ஸ் குரூப் பங்கேற்று சிறப்பு செய்திருந்தனர்.
சுகுமாரன்
