
திருவள்ளூர் மாவட்ட பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரைத்திருவிழா விஷ்ணு பவன ரத திருத்தேரில் எழுந்தருளி கரி கிருஷ்ண பெருமாள் வீதி உலா! கோவிந்தா, கோவிந்தா… கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகால சோழனால் கட்டப்பட்ட பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் திருக்கோவில் உள்ளது. ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 1 ஆம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் மகாவிஷ்ணுவும்-சிவ பெருமானும் ஒன்றாக காட்சி தரும் அரியதொரு நிகழ்வான ஹரிஹரன் சந்திப்பு பெருவிழா நடைபெற்ற நிலையில், 7 ஆம் நாளான இன்று அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பாவனா ரதம் என்ற திருத்தேரில், அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் எழுந்தருளி மங்கள வாத்தியம் வழங்க பெரு திரளான பக்தர்கள் கோவிந்தா ” கோவிந்தா “என்ற திருமந்திரத்தை உச்சரித்தபடி பக்தி பரவசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்ல முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து எம் பெருமான் கரிகிருஷ்ணன் அருள் மழை பொழிந்தான். முன்னதாக தேர் திருவிழாவை முன்னிட்டு சைவ சமய கடவுள் ஆன அங்குள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் பெருமானுக்கும், வைணவ சமய தெய்வங்களான அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் சமேத அருள்மிகு ஸ்ரீ கரி கிருஷ்ண பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீப ஆராதனைகள் நடைபெற்றன.

சித்திரை திருவிழாவின் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த பொது மக்களுக்கு நகரின் பல பகுதிகளிலும் தன் ஆர்வலர்கள் நீர்மோர், குடிநீர், பிரசாதம், அன்னதானம் ஆகியவற்றை வழங்கினார்.
பொன்.கோ.முத்து

