டாஸ்மாக்கில் காலிபாட்டில் திரும்பப் பெறும் விவகாரம் |

வீட்டுவசதி (ம) மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :

டாஸ்மாக்கில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறுவதில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச் சுமை உள்ளதை ஒப்புக் கொள்கிறோம். அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை, காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் பணியாளர்கள் கண்டிப்பாக திரும்ப பெற வேண்டும். இது குறித்து தொழிற்சங்கங்கள், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.

மதுபாட்டில்கள் வைப்பதற்கு இடப்பற்றாக்குறை இருப்பதால், தினமும் இரண்டு முறை பாட்டில்களை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம்.

காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் விவகாரத்தில், டாஸ்மாக் துறையும், பணியாளர்களும் இணைந்து நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும்.

காலி மதுபாட்டில்களை வெளியே போடும்போது விவசாயம் பாதிக்கப்படுகிறது. நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டதால் தான், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்றும்; அதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும்; நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படிதான், காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோர்ட்டு கொடுத்த கால அவகாச அடிப்படையில், பணிகளை முடிப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சேரான்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *