ஓவர்டேக் முயற்சி : 3 கல்லூரி பேருந்துகள் விபத்தில் சிக்கின…

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பஞ்செட்டி வேலம்மாள் பொறியியல் கல்லூரி உள்ளது. இன்று மாலை வகுப்புகள் முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு அவர்களது இருப்பிடத்திற்கு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த இரண்டு கல்லூரி பேருந்துகள் ‘காரனோடை’ என்ற பகுதியை அடைந்தது.

அப்போது ஒன்றை ஒன்று முந்தி செல்ல கல்லூரி பேருந்துகள் முயன்ற போது ஓட்டுநர்களின் கட்டுப்பாட்டை பேருந்துகள் இழந்தது. ஒரு பேருந்து சாலை தடுப்பு சுவற்றில் மோதி விபத்தில் சிக்கியது.

அதில் இரண்டு பேருந்துகளின் பக்கவாட்டில், சேதம் ஏற்பட்டது. பேருந்தில் இருந்த மாணவர்கள் சிலர் லேசான காயமடைந்தனர்.
சக மாணவர்கள் 108 அவசர ஊர்தி மூலம் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஒரே தனியார் கல்லூரியை சேர்ந்த இரண்டு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று உரசி விபத்துக்குள்ளானதால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *