சிறுவாபுரி முருகனுக்கு காணிக்கை!

அறுபடை வீடுகளுக்கு இணையாக
முருக பக்தர்களால் கொண்டாடப்படுவது சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்ட சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆகும். கடந்த 70 நாள்களில் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணி சரிபார்க்கும் பணி, இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலர் மாதவன் முன்னிலையில் நடைபெற்றது. கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காணிக்கையை சரிபார்த்தனர். உண்டியல் காணிக்கை 92 லட்சத்து 45 ஆயிரத்து 812 ரூபாய், 59 கிராம் தங்கம்,
8 கிலோ 345 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக வந்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *