
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை எதிர் கொள்ளும் பொருட்டு தீவிர களப் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் புதிய முயற்சியை செயல்படுத்தியுள்ளார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு மாவட்ட செயலாளர்களாக ஒரே நேரத்தில் 120 ஆள்களை நியமித்துள்ளார். கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்கள் கட்சிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்து தவெக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள், தவெகவில் நியமனம் செய்துள்ளனர்.
மேலும் மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பாரதி
