தேர்தலை நினைத்து பிஜேபி நடுக்கம்: திமுக

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் மீஞ்சூர் (கி) ஒன்றிய திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம். எஸ். கே. ரமேஷ்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

தமிழ் கா. அமுதரசன் பேச்சு

கிழக்கு மாவட்ட செயலாளரும், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.வுமான டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை நிலைய நிர்வாகி- பொன்னேரி தொகுதி பொறுப்பாளர் தமிழ் கா. அமுதரசன் பங்கேற்று பேசினர். நாடாளுமன்ற தேர்தலில் கட்சியினர் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிளைகளிலும் வாக்குச்சாவடி வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் ராஜியை, தலைமை நிலைய பொறுப்பாளர்கள் பாராட்டினர். மாவட்ட அவைத்தலைவர் பகலவன், பொன்னேரி நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

P.K.M.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *