ரேசன் அரிசி கடத்தல் பின்னணி…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் சின்ன ஒபுளாபுரம் பகுதி, சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துதான் வீடியோவில் இருப்பது…

சிறிய வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில்  மோதிய விபத்தில் வேன் டிரைவர் காயத்துடன் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

ஆம்! தமிழ்நாட்டு ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்திக்கொண்டு வேகமாய் போகும்போது விபத்து ஏற்படத்தானே செய்யும். இன்றும் அதுதான் நடந்தது.


பொதுமக்கள் தகவலின் பேரில், சிப்காட் போலீசார் வரவே, வேன் டிரைவர் காயத்துடன் பிடித்துள்ளார் ஓட்டம்.

ஐந்து டன் எடையுள்ள நியாய விலைக்கடை அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி கிடப்பதை வீடியோவில் பார்க்கலாம்.

முதற்கட்ட விசாரணையில் சட்ட விரோதமாக தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்த முயன்று வேனை, வேகமாக ஓட்டியதால் அது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *