தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச திருமண விழா…

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி முருகன் கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்படி இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் குறு- சிறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவரும் வடக்கு ஒன்றிய செயலாளருமான எல்.இதயவர்மன் திருமணத்தை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் திருப்போரூர் பேரூராட்சி மன்றதலைவர் பேரூர் செயலாளர் எம்.தேவராஜ், வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஏ.ரமேஷ் பேரூராட்சி மன்ற துணை தலைவர்- பேரூர் துணை செயலாளர் ஆர்.பரசுராமன், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மாவட்ட அரசு அதிகாரிகள், திருக்கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

பிரீத்தி எஸ்.

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *