ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஆந்திரா முழுவதும் பதற்றம் நிலவுவதால் பேருந்து போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.
பல இடங்களில் சாலைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திரமாநில பிச்சாட்டூர் நெடுஞ்சாலையில் சந்திரபாபு நாயுடுவின் கைது கண்டித்தும்; அவரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும்; தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சியினரை கைது செய்தனர்.
பொன்.கோ.முத்து