திமுகவின் ஆட்சியைக் கண்டித்து சென்னை புதுவண்ணை ஏ.இ. கோயில் அருகே அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து மகளிர்க்கும் மாத உதவித்தொகை ரூ.ஆயிரம் தருவதாக அறிவித்து பின்னர் அதில் மாற்றம் செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுமக்கள் அப்போது குறிப்பிட்டுப் பேசி கோஷம் எழுப்பினர்.
வடசென்னை வடக்கு (கிழக்கு) அதிமுக மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசும்போது, “தி.மு.க. ஆட்சிக்கு வந்து 27-மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. ஏற்கனவே சொன்னபடி செய்யாமல், மகளிர் உரிமைத்தொகை, தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என, தற்போது முதல்வர் ஸ்டாலின் மாற்றிச் சொல்வது முற்றிலும் முரணானது. பெண்களின் தாய்மார்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் செயலாகவே அதை பார்க்கிறோம்.” என்றார்.
சேரான்