வயலில் அறுந்து கிடந்த மின்சார கம்பி! விவசாயி பரிதாபசாவு…

திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் ஊராட்சி, கல்பாக்கம் கிராமத்தில் வயல் வெளியில் தொங்கிக் கிடக்கும் மின் கம்பங்கள் குறித்தும் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத மின்வாரியம் குறித்தும் நாம் செய்தியை எழுதி இரண்டாவது நாளில் ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. பரவலாகவே திருவள்ளூர் மாவட்டத்தில் இதே நிலைதான் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மோகன் பாபுவுக்கு வயது 24- தான். இன்று உயிரோடு இல்லை. இன்று காலை வழக்கம் போல வயல் வெளிக்கு மோகன்பாபு சென்றபோது, அங்கு அறுந்து கீழே விழுந்து கிடந்த உயரழுத்த மின் கம்பியை மிதித்து விட்டார்.
நொடிப்பொழுதில் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் மோகன்பாபு உயிரிழந்தார். ஆரணி போலீசார், மோகன்பாபு உடலை கைப்பற்றி உடற்கூராய்வு அறிக்கை பெற, பொன்னேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொன்.கோ.முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *