சென்னை புறநகர் ரயில்கள் தாமதம் -காரணம் இதுதான் !

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சென்னை நோக்கி வந்த சர்கார் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்னேரி
ரயில் நிலையத்தை கடந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு பாதி
வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு செல்லும் புறநகர்
ரயில் சேவை இதனால் பாதிக்கப்பட்டு ரயில்கள் அனைத்தும் ஒன்றன் பின்
ஒன்றாக நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலை
ஆய்வு செய்த ரயில்வே ஊழியர்கள், வேகத்தை குறைத்து பாதுகாப்புடன்
மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி பழுது சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மார்கத்தில்
செல்லும் புறநகர் ரயில்கள் சுமார் 1மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டு
வருகின்றன. காலை நேரத்தில் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில்கள் தாமதமாக இயக்கப் படுவதால் அலுவலகம் செல்வோர் அவதியடைந்தனர்.


தொடர்ந்து சர்கார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு
ரயில்வே ஊழியர்களால் சரி செய்யப்பட்டு சுமார் 2மணி நேர தாமத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. சென்னை – கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 4வழிப்பாதை
பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

பொன். கோ. முத்து

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *