மயிர்நீத்தால் உயிர் நீக்கும் மனித கவரிமான்களின் ஆக்ஸிஜனாக
வந்து சேர்ந்திருக்கிறார், மருத்துவர் ஜியா (எ) முகம்மது ஜியாவுதீன் !
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை பரப்பி
நிற்பதோடு கிழக்காசிய நாடுகளிலும் ‘கவர்ச்சி’ ப்பொருளாகவே
கவனிக்கப்படுகிற நபராக வலம் வருகிறார்.
முன் வழுக்கை, முழுதும் சொட்டை, பின் வழுக்கை, பொடுகு, மயிர் சொட்ட ஆரம்பிக்கும் ஆரம்பநிலை என மயிர் காக்கும் ‘தலை’ மகனாகவே இவரது சிசிச்சை முறை இருக்கிறது ! மணமகள் தேவை அறிப்பைக் கொடுத்து விட்டு மருத்துவர் ஜியாவின் அப்பாய்ன்மெண்ட் கேட்டு 72996 02 450- என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்புகிறவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
( மைண்ட் வாய்ஸ் நண்பர்களுக்காக : அது குறித்த அக்கறை இல்லாததால் நான் இன்னும் முயற்சிக்கவில்லை).
ஏழெட்டு மாதங்கள் முன்னர், நிகழ்வொன்றில் மருத்துவர்
திரு.ஜியாவை சந்தித்தேன். நீண்டு வளர்ந்த மயிரை, பெண்கள்
போல் கொண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு ரிலாக்ஸ்டான
தருணம் அது. அவர் முன்னே, எனக்கு அண்ணன் போல் இருந்த இளநீர் மண்டை தம்பிகள் இருவர், மருத்துவர் ஜியாவை கோபமும், தாபமும், ஏக்கமும்
சேர்ந்த கலவையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
என்னை உட்காரச்சொல்லி விட்டு, அந்த அண்ணன் தோற்றத்தில் இருந்த
தம்பிகளின் தலையில் கையை வைத்து தடவியபடி, ’மயிர் முளைக்க எத்தனை வாரம் ஆகும், மயிர் முளைக்க
என்னென்ன செய்யவேண்டும், நீங்களே வீட்டில் வைத்து சிகிச்சை
செய்து கொண்டாலும் சரி, கருவிகள் தருகிறேன், எண்ணெய் தருகிறேன்,
பயிற்சிக்கான வீடியோவைக் கொடுக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அப்போது நான் பார்த்த தம்பிகள் இருவர், காத்திருப்பில் இருந்த ஆறு
பேர் தலைகளை கவனத்தில் வைத்துக் கொண்டேன். ரிசல்ட் வந்து விட்டால் யாருக்காவது சொல்வோம் என்ற நினைப்பு எனக்கு. அன்று பார்த்த தம்பிகளில் மூன்றுபேரை கடந்தவாரம், சென்னை தேனாம்பேட்டையிலிருக்கும் அதே ‘சன் பிளாஸா’ முதல்மாடியில்
வைத்துப் பார்த்தேன். ஏதாவது பிளாண்டேஷன் வித்தையாக இருக்குமோ என்று நினைக்கும் அளவுக்கு மூவரும் மண்டையில் மயிர் நிறைந்து காட்சியளித்தார்கள். இழுத்துப் பார்த்து விடலாமா என்று கூட தோணியது !
ஒன்றும் பேசத்தோணவில்லை, தலையை லேசாய் தடவியபடி
அங்கிருந்து புறப்பட்டுவிட்டேன்.
’கொரோனா காலகட்டத்தில் மணிக்கட்டின் மீது கைகளை வைத்து ஓங்கித் தட்டிக்கொண்டே இருங்கள், ஆக்ஸிஜன் லெவல் கூடிவிடும்’ என்று ’வர்ம’ முறையில் வைத்தியம் சொல்லி அதை யூடியூப்பில் பதிவேற்றம் செய்த போது, மருத்துவர் ஜியா எனக்கு அறிமுகம். அது, லட்சக்கணக்கானோர் பார்த்து உயிர் பிழைக்க காரணமாக இருந்த வீடியோவும் கூட.
மிகவும் சீரியஸான கேஸ்களை கூட பதற்றமில்லாமல் அணுகக் கூடியவர்
மருத்துவர் ஜியா.
மூட்டுவலி, கைகால் வலி, நரம்புகளில் கோளாறு, வயிற்றுப்பிரச்சினை, சோரியாஸிஸ், மன அழுத்தம் என பிரச்சினைகளோடு வந்து – மகிழ்வோடு
திரும்பிப்போகும் பலரை நானே நேரில் பார்த்துள்ளேன்.
இன்று நடைமுறையிலுள்ள ‘கப்பிங் தெரபி’ யையும் தேவைக்கேற்ப
பயன்படுத்தும் மருத்துவர் ஜியா, தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பலரை
வர்ம -அக்குபிரஷர் மருத்துவர்களாக்கி அவர்களின் வாழ்க்கையையே
மாற்றி அமைத்திருக்கிறார் என்ற ஒன்றே, அவர்உள்ளத்தை படம்பிடித்துக் காட்டக்கூடிய ஒன்று.
நல்ல மனிதர். நல்ல புகழும், நிறை ஆயுளும், மனநிம்மதியும் பெற்று
எந்நாளும் சிறப்பான சேவையை அளிக்க வாழ்வாங்கு வாழ்ந்திருக்க
வாழ்த்துவதில் மகிழ்ச்சி !
ந.பா.சேதுராமன்