திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில், பத்து நாள் பங்குனி பிரம்மோற்சவத்துக்கான ஏற்பாடுகள், சிறப்பாக நடந்தது.
கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் பூஜையுடன் கடந்த 14 -ஆம் தேதி தொடங்கி மறுநாள் விநாயகர் வழிபாடும், 16- ஆம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார தீப ஆராதனைகள், சுவாமி திருவீதி உலா ஆகியவையும், சிறப்பாக நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக பங்குனி தேரோட்ட விழாவும் நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் ஆனந்த வள்ளி தாயாருடன் எழுந்தருளிய அகத்தீஸ்வர பெருமான் பக்தர்கள் தேர் வடம் பிடித்து ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை முழங்கியபடி சென்றனர்.
மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக உலாவந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாவித்தார், இன்று (25.03.2024) பகல், மகா அபிஷேகம் தொடங்கி இரவு பங்குனி உத்திர திருக்கல்யாண தெப்ப உற்சவமும் அதனைத் தொடர்ந்து திருவீதி உலாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்.கோ.முத்து