சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி, புகார்மனுவுடன் பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள்,
அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, அமைச்சர்
பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுக்கப் போவதாக எடப்பாடி
பழனிசாமி அறிவித்து இருந்தார்.
மனு கொடுக்கும் நிகழ்வுக்கு வரும்படி அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும்
எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து இருந்தார்.
அதன்படி நேற்று காலை சென்னை சைதாப்பேட்டை சின்னமலை அருகே ஆயிரக்கணக்கில் அ.தி.மு.க.வினர் திரண்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான தொண்டர்கள், தி.மு.க. ஆட்சிக்கு எதிரான பதாகைகளுடன் கலந்து கொண்டனர். எடப்பாடி பழனிசாமி வந்ததும் அவர் தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி கண்டன பேரணி
நடைபெற்றது.
பேரணி ஆளுநர் மாளிகையை அடைந்ததும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவரிடத்தில் மனு அளித்தார். இந்நிலையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற 5,500 அதிமுகவினர் மீது 3 பிரிவுகளின்
கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட 5,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
நம்பி