(பரிகாரம் – பதிவு – 3)
அண்மையில் கிடைக்கும் தகவலின்படி சனி பகவானின் ஸ்தலமான திருநள்ளாறின் மீது சாட்டிலைட்டுகள் பறக்கும் போது அவை ஒரு சில நொடிகள் செயலற்று போவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் சனி கிரகத்திற்கும் திருநள்ளாறு ஸ்தலத்திற்கும் கதிர்வீச்சு மூலம் ஒரு தொடர்பு இருப்பதாகவும் அதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று நவகிரக ஸ்தலங்கள் ஒவ்வொன்றுக்கும் அந்த கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள, இந்த தகவல் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களுக்கு தெரிய வந்தது எப்படி ? புரியாத புதிர்களில் இது ஒன்றாக உள்ளது. அதனால்தான் நம் முன்னோர்கள் சனி பகவானால் ஏற்படும் இன்னல்களை போக்க திருநள்ளாறில் பரிகாரம் செய்ய சொன்னார்கள் போலும். இதே போல் தற்போது செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோள் அனுப்பப்பட்டு அது சிவப்பாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு சிவப்பு நிறம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் வியப்பில் ஆழ்த்துகிறது.
கிரகங்களின் பொசிஷன் மாறுவதால், அதிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள்ஒருவரது வாழ்க்கையில், பாதிப்புகள் ஏற்படுத்தும் என்ற நிலையில், அந்த பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்யப்படுவதுதான் பரிகாரம்.
இப்போது அடுத்த கேள்வி, பரிகாரம் என்பது எப்படி வேலை செய்கிறது என்பதுதான்.
எக்ஸ்ரே மிஷின்களில் பணி புரிபவர்கள் அந்த மிஷினில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து தம்மை காத்துக் கொள்ள எப்படி ஒரு தடையை ஏற்படுத்திக் கொள்கிறார்களோ அப்படிதான் பரிகாரம் என்பதும். குறிப்பிட்ட ஒரு கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்களை கட்டுப்படுத்தி அதன்பாதிப்பில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள செய்யப்படுவதுதான் பரிகாரம். அதாவது ஒரு கிரகத்தின் புற ஊதாக்கதிர்களை பெறும் வகையில் அந்த கிரகத்திற்குரிய குறிப்பிட்ட வடிவிலான கடவுள் உருவம் வடிக்கப்பட்டு ஆலயங்களில் நிறுவப்பட்டுள்ளது. (சாட்டிலைட் ரிசீவர் போல) அந்த கடவுளுக்கு நாம் பரிகாரம் செய்யும்போது அநத கடவுளின் சிலையில் இருந்து பிரதிபலிக்கும் அந்த கிரகத்திற்குரிய புற ஊதாக்கதிர்கள் நம்மீது படும் போது நமக்கு அதன் தாக்கம் ஏறப்பட்டு புற ஊதா கதிர்களின் பற்றாக்குறை நீக்கப்படுவதால் நமது எண்ணங்களும் செயல்களும் மாறுபடுகின்றன. ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 3,6,8,12 என்பது மறைவு ஸ்தானங்கள் என்றும், இதில் உள்ள கிரகங்கள் காரகரீதியாகவும், ஆதிபத்திய ரீதியாகவும்; சுப பலன்களை தராது என்றும்; அசுப பலன்களை தரும் என்றும்; ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இது எதன் அடிப்படையில் கூறப்படுகிறது என்றால், மறைவு ஸ்தானங்கள் எனப்படும் பாகை கலைகளில் உள்ள கிரகங்களில் இருந்து வெளிப்படும் புற ஊதாகதிர்கள்; அந்த ஜாதகருக்கு போதுமான அளவிற்கு கிடைப்பதில்லை என்பதால்; இது போன்று பலன்கள் நடப்பதாக தெரியவருகிறது. அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் நல்ல பலன்கள் குறிப்பாக அந்த கிரக தசா புத்தி காலத்தில் காரக ரீதியாகவும் ஆதிபத்திய ரீதியாகவும் சுப பலன்களை தரும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது. இதற்கு காரணம் ஜனன ஜாதகப்படி அந்த ஜாதகருக்கு கிரகங்களில் இருந்து கிடைக்கும் புற ஊதா கதிர்களின் ஆங்கிள் (கோணம்) மாறுவதால் எற்படும் பாதிப்புதான் என்றே கூறவேண்டும்.
(மேலும் அடுத்த பதிவில்)
(கட்டுரையாளர்: ஜோதிடரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி.ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-)