காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் சமூக நலம் மற்றும் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமையில் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அமைச்சர் பேசும் போது, வடமொழியில் வைத்துள்ள பிள்ளைகளின் பெயருக்கு தமிழ்ப்பெயரைச் சொல்லி, புத்திமதி வழங்கினார். குறிப்பாய் யாஷிகா என்றால் பிச்சைக்காரி என்று அளித்த விளக்கத்தால் சிரிப்பலை எழுந்தது.
காஞ்சிபுரம் எம்.பி., க.செல்வம் மற்றும் சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, திருப்போரூர் எம்.எல்.ஏ.க்கள், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.எல். இதயவர்மன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர், துணைத்தலைவர், காட்டாங்குளத்தூர் திருப்போரூர்
ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் , துணை தலைவர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒன்றிய செயலாளர்கள் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பிரீத்தி எஸ்