கருங்கோழிக்கறியும் அதன் முட்டைகளும் மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான பொக்கிஷம் என்கிறார் இளம் தொழில் முனைவோரான திருச்சியைச் சேர்ந்த இளைஞர் வீரமணி. “கெமிக்கல் இல்லாத இயற்கை தீவனங்களை மட்டுமே உணவாகக் கொடுத்து சுத்தமான காற்றோட்டத்தில் கிடைக்கும் கருங்கோழிகளே சிறந்தது, அந்த சிறந்ததை மட்டுமே நாங்கள் மக்களுக்கு அளிக்கிறோம்” என்கிறார் வீரமணி. மெட்ராஸ்குரல் இணையத்துக்காக திரு. வீரமணி பேசியவற்றின் தொகுப்பு இதோ! “முட்டையின் மருத்துவ குணங்கள் !
அதிகளவு புரதச்சத்துகள், அமினோ அமிலங்கள் உள்ளதால், வளரும் குழந்தைகளுக்கு
மிகவும் ஏற்றது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
கொலஸ்ட்ராலின் அளவு குறைவாக இருப்பதாலும், ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாலும், முதியோர் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
கருங்கோழியின் மருத்துவ குணங்கள் :
நோய் எதிர்ப்பு சக்தி மிக்கதால் கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடுகிறது மற்றும் சுவையிலும், மருத்துவ குணத்திலும் மேலோங்கி நிற்பது கருங்கோழியின் தனிச்சிறப்பு.
நல்ல கொழுப்புச் சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகம் உள்ளது.
நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகிறது. உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
கருங்கோழி இரத்தத்தில் B1, B2, B6, B12, C மற்றும் E வைட்டமின் சத்துக்கள் உள்ளன.
நாள்பட்ட நோய்களுக்கு மிகுந்த சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது.
கருங்கோழியில் “25% புரதச் சத்தும், கொலஸ்ட்ராலின் அளவு 0.73 – 1.05% மட்டுமே உள்ளதால் இருதய நோய் மற்றும் இதய பாதிப்பு உடையவர்கள் சாப்பிடலாம்” என்று உணவு ஆராய்ச்சி கழகம் சான்றளித்துள்ளது.
இயற்கை ஆண்மை பெருக்கியாக (இயற்கை வயாகரா) மருத்துவத்தில் பயன்படுகிறது.
சீன மருத்துவத்தில் கருங் கோழியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
குட்டம், காணாக்கடி, சிரங்கு, வீரணங்கள், வாதம், விக்கல், மூலம் நோய்கள் மற்றும் வாயு நோய்கள் கருங்கோழிக் கறியால் குணமாகும் என்கிறது சித்த மருத்துவம்.
உயிர் கோழிகள் மற்றும் முட்டைகள் பண்ணை விலைக்கே கிடைக்கும்.
HAPP டவுன்ஷீப் அருகில், OFT மெயின் ரோடு, கும்பக்குடி, திருச்சி – 25 – ல் அழகான கருங்கோழிப் பண்ணைக்கு நேரில் வந்தும் வாங்கிக் கொள்ளலாம். சில காலத்துக்கு (மட்டும்) கருங்கோழி எம்மிடம் விற்பனைக்கு இல்லை, முட்டை மட்டுமே கிடைக்கும்” என்கிறார் இளம் தொழில் முனைவோரான இளைஞர் வீரமணி. விலை விபரம் கேட்ட போது, “முட்டை ஒன்றுக்குபண்ணை விலை 15 ரூபாய்க்கு கிடைக்கும். திருச்சி சுற்றுப்புற பகுதிகளுக்கு தேவையென்றால் டிரான்ஸ்போர்ட்டிங் காரணமாக 20 ரூபாயும், சென்னைக்கு சப்ளை என்றால் 25 ரூபாயும் ஆகும் என்கிறார் வீரமணி. அதேபோல் கறியின் விலை, பண்ணையில் நேரடியாக (கறி தற்போது ஸ்டாக் இல்லை) பெறும் போது கிலோ 500 ரூபாய்க்கு கிடைக்கும் ” என்கிறார். மேலும் விபரங்கள் அறிய வீரமணியிடமே பேசலாம்!
தொடர்புக்கு : தொழில் முனைவோர் வீரமணி : 94436 82000, 94436 83000, 94435 84000 – தொகுப்பு : சேரான்