(தொடர் பதிவு -8)
ரத்தின கற்களும் – பரிகாரமும்…
சாதாரணமாக ராசிக்கு ஏற்ற ரத்தின கல்லை அணிந்தால் நன்மை நடக்கும் என்று பல விளம்பரங்கள் வருகின்றன. அந்த விளம்பரங்களை பார்த்து பலரும் தங்களது பிறந்த நட்சத்திரபடியான ராசி அல்லது தங்கள் பெயருக்கு ஏற்ற ராசிக்கான நவரத்தின கல்லை தேர்வு செய்து அதனை அணிகிறார்கள். அதை அணிந்த பிறகும் தங்களது கஷ்டம் குறையவில்லை, ராசிக்கல் மோதிரம் அணிந்தும் கஷ்டம்தான் என்று புலம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதற்கான காரணம் , ஒருவர் பிறந்த லக்னத்திற்கு பாதக ராசியாக வரும் அதிபதி அல்லது தனது லக்னம் அல்லது ராசிக்கு பகை கிரகத்திற்கான நவரத்தின கல்லை, அவர் தனது ராசிக்கான கல்லாக தேர்வு செய்து அணிந்துவிட்டால்; அந்த ரத்தினம் அவருக்கு நற்பலன் தராமல் செய்து விடக்கூடும். அதனால் ராசிக்கு உரிய ரத்தினம் அணிவதை விட லக்னத்திற்கு உரிய நவரத்தினத்தை தேர்வு செய்து அணிவதை நல்லது. அதுவும் எந்த தசாபுத்தி நடைபெறுகிறதோ அந்த தசா நாதன் மற்றும் புத்திநாதன் தங்கள் லக்னத்திற்கு சாதகமான கிரகங்களா என்பதை ஜோதிடர் மூலம் சரிபார்த்து அணிய வேண்டும்.
இனி 12 லக்னத்திற்கும் உரிய நவரத்தின கற்கள் குறித்து காண்போம்.
மேஷம் : இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள், மாணிக்கம், வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான், பவளம், கனக புஷ்பராகம், முத்து அல்லது சந்திரகாந்த கல் போன்றவற்றை அணியலாம். இந்த லக்னத்தினர் கோமேதகம், வைடூரியம், மரகதபச்சை மற்றும் நீலம் ஆகிய நவரத்தின கற்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் கோமேதகம், வைடூரியம், நீலம், மரகதப்பச்சை, பவளம், வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் போன்ற நவரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் மாணிக்கம், முத்து, கனக புஷ்பராகம் ஆகிய ரத்தினங்கள் அணிவதை தவிர்க்கவேண்டும்.
மிதுனம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், மரகத பச்சை, வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான், கோமேதகம், வைடூரியம் மற்றும் நீலம் ஆகிய ரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் முத்து அல்லது சந்திரகாந்தகல், கனக புஷ்பராகம், பவளம் போன்ற ரத்தினங்களை தவிர்ப்பது நல்லது.
கடகம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், முத்து அல்லது சந்திரகாந்த கல், கனக புஷ்பராகம் மற்றும் பவளம் ஆகிய ரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் கோமேதகம், வைடூரியம், மரகதப்பச்சை, வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் மற்றும் நீலம் ஆகிய ரத்தினங்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், முத்து அல்லது சந்திரகாந்தகல், பவளம், மரகத பச்சை, கனக புஷ்ப ராகம் போன்ற ரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் கோமேதகம், வைடூரியம், வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான், நீலம் போன்ற ரத்தின கற்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.
கன்னி: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், மரகத பச்சை, வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான், கோமேதகம், வைடூரியம் மற்றும் நீலம் ஆகிய ரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் முத்து அல்லது சந்திரகாந்தகல், கனக புஷ்பராகம், பவளம் போன்ற ரத்தினங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் வெள்ளை ஜிர்கான், கோமேதகம், வைடூரியம், நீலம், மரகதப்பச்சை, பவளம் போன்ற நவரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் மாணிக்கம், முத்து, கனக புஷ்பராகம் ஆகிய ரத்தினங்கள் அணிவதை தவிர்க்கவேண்டும்.
விருச்சிகம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான், பவளம், கனக புஷ்பராகம், முத்து அல்லது சந்திரகாந்த கல் போன்றவற்றை அணியலாம். இந்த லக்னத்தினர் கோமேதகம், வைடூரியம், மரகதபச்சை மற்றும் நீலம் ஆகிய நவரத்தின கற்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.
தனுசு: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், முத்து அல்லது சந்திரகாந்தகல், பவளம், கோமேதகம், வைடூரியம், கனக புஷபராகம் மற்றும் நீலம் ஆகிய நவரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் மரகத பச்சை மற்றும் வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் ஆகிய ரத்தினங்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.
மகரம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள, நீலம், கனக புஷ்பராகம், மரகத பச்சை, வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் , கோமேதகம், மற்றும் வைடூரியம் போன்ற ரத்தின கற்களை அணியலாம். மாணிக்கம், முத்து அல்லது சந்திர காந்த கல் மற்றும் பவளம் ஆகிய ரத்தினங்கள் அணிவதை தவர்க்க வேண்டும்.
கும்பம் : இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் கனக புஷ்பராகம், மரகத பச்சை, நீலம், வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் , கோமேதகம், மற்றும் வைடூரியம் போன்ற ரத்தின கற்களை அணியலாம். மாணிக்கம், முத்து அல்லது சந்திர காந்த கல் மற்றும் பவளம் ஆகிய ரத்தினங்கள் அணிவதை தவர்க்க வேண்டும்.
மீனம்: இந்த ராசியை லக்னமாக கொண்டவர்கள் மாணிக்கம், முத்து அல்லது சந்திரகாந்தகல், பவளம், கோமேதகம், வைடூரியம், கனக புஷபராகம் மற்றும் நீலம் ஆகிய நவரத்தினங்களை அணியலாம். இந்த லக்னத்தினர் மரகத பச்சை மற்றும் வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் ஆகிய ரத்தினங்களை அணிவதை தவிர்க்க வேண்டும்.
உதாரணமாக மேஷ லக்னத்தினருக்கு சுக்கிர தசை, புதன் புத்தி நடப்பதாக வைத்துக்கொண்டால் அந்த ஜாதகர் சுக்கிரனுக்கு உரிய வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் ரத்தின கல்லை வெள்ளியில் கட்டி அணியவேண்டும். அந்த லக்னத்தினர் புதனுக்கு உரிய மரகதபச்சை நவரத்தின கல் அணிவதை தவிர்க்கவேண்டும்.
எந்த உலோகத்தில் மோதிரம் செய்வது?
வைரம் அல்லது வெள்ளை ஜிர்கான் மற்றும் மரகத பச்சை ஆகிய ரத்தின கற்களை வெள்ளியில் மட்டுமே மோதிரமாக செய்து அணிய வேண்டும்.
பவளம், நீலம், கோமேதகம், வைடூரியம் ஆகிய ரத்தின கற்களை தங்கம் அல்லது வெள்ளியில் மோதிரமாக செய்து அணியலாம்.
முத்து அல்லது சந்திரகாந்த கல், கனக புஷ்பராகம் ஆகிய ரத்தினங்களை தங்கத்தில் மட்டுமே மோதிரமாக செய்து அணிய வேண்டும்.
பரிகார மோதிரங்களில் சுமாராக 2 கேரட் அளவில் ரத்தின கற்கள் பதிக்கப்பட வேண்டும். அத்துடன் மோதிரத்தின் உள்பகுதியில் கற்களுக்கு கீழே ஒரு திறப்பு (துவாரம்) இருக்க வேண்டும். அந்த திறப்பின் மூலம் அந்த ரத்தினம் நமது கையில் படவேண்டும். அப்போதுதான் அந்த குறிப்பிட்ட கிரகத்தில் இருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள் நமது உடலை சேரும். நவரத்தின மோதிரம் என்று 9 கற்களையும் ஒரே மோதிரத்தில் கட்டி அணிகிறார்கள். இந்த நவரத்தினங்களில் அந்த நபரின் ஜாதகத்தில் பாதகாதி அல்லது பகை கிரகங்களின் ரத்தின கற்கள் இருந்தால் அது ஜாதகருக்கு நல்ல பலன்களை தராமல் கெடு பலன்களை தரும் என்கிறது ரத்தின சாஸ்திரம்.
கட்டுரையாளர்: ஜோதிட ரத்னா, பஞ்சாங்க கணிதமணி, பூம்புகார் ஜி. ஸ்ரீனிவாசன் M.A (Astrology) தொடர்புக்கு: வாட்சப் எண்: 9499902400 – கைபேசி > 9080082200-