மாதவரத்தில் கூத்தாடும் உயர்மின் அழுத்த கம்பி…

எந்த நேரமும் கீழே சாய்ந்து விடுவேன் என்று அச்சுறுத்துவது போல் மின் கம்பங்கள் நாள்கணக்கில் கிடந்தும் பதறாமல் உள்ளனர் அதிகாரிகள். சென்னை புறநகர் மாதவரம் பகுதியில்தான் இப்படியான ஒரு அவலநிலை!

சென்னை மாதவரம் – மஞ்சம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ளது, மீனாட்சி மாவுமில். உள்ளூர் மக்களுக்கு மாலை வேளையில் உணவு தானிய வகைகளை அரைத்துக் கொடுக்கும் மாவுமில் என்பதால் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும். இந்த மாவுமில்லின் பக்கவாட்டில் உள்ள மின் கம்பி, பாதிக்கும் மேலாக சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. உயர்மின்சாரம் அதில் போய்க் கொண்டிருக்கிறதா அல்லது மின்சார இணைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டதா போன்ற விபரம் தெரியவில்லை. மின்சாரம் பாய்ந்து விபத்து உண்டாகிறதோ இல்லையோ மின் கம்பம் சாய்ந்து விழுந்தாலும் அதனால் பலர் பாதிக்கப்படுவது மட்டும் உறுதி. ‘இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் பெருமழை உண்டு’ என்று அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம். தமிழ்நாட்டின் தலைநகருக்கு அருகில்தான் மாதவரம் இருக்கிறது அதிகாரிகளே. வருமுன் காப்போம் கோட்பாட்டின் கீழ் இது போன்ற விஷயங்களுக்கான தீர்வையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழ்க்குமரன்

Posted Under new

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *