சென்னை புழல் மத்திய சிறையில் போலீசாரின் திடீர் சோதனையின் போது கஞ்சா, பான் பராக், குட்கா, மது பாட்டில்கள், போதை மாத்திரைகள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப் படுவது தொடர்கதை ஆகி வருகிறது.
நேற்றிரவு சிறைக் காவலர்கள் விசாரணை பிரிவில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரூ.1,500 கோடி மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆல்வின் உள்ளிட்ட ஆறு கைதிகளிடம் இருந்து கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திருமலை நம்பிராஜன் என்ற சிறை காவலர் கைதிகளுக்கு வெளியில் உள்ள நபர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு, போதைப் பொருட்களை சிறைக்குள் விநியோகம் செய்து வருவது தெரியவந்தது. சிறைக் காவலர் திருமலை நம்பி ராஜன் உடனடியாக செய்யப்பட்டார்.
அவருக்கு யார் -யாரிடம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சேரான்