சென்னை போலீஸ் ரெய்டு : கஞ்சா – போதை மாத்திரைகள் பறிமுதல்! 129 பேர் கைது

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், ஏழு நாட்கள் போலீசார், பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive against Drugs) என்ற திட்டத்தை போலீசார் மேற் கொண்டு வருகின்றனர். 25.03.2022 முதல் 31.03.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதில் கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர். 77.2 கிலோ கஞ்சா, 4,658 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் இந்த நடவடிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா கடத்தி வந்த சென்னை மேட்டுக்குப்பம் பிரபாகரன் (எ) தக்காளி பிரபாவை மதுரவாயல் போலீசார் பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர் அளித்த தகவலில் மதுரவாயல் அருண் (எ) கில்லி அருண், ஆழ்வார் திருநகர் ஆனந்த் (எ) கோழிபாபு, நெற்குன்றம் பூங்காவனம், ஆகியோரை கைது செய்து 21.3 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். டூவீலர் பல்சர் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, கிண்டி போலீசாரிடம், சிக்கிய மதுரவாயல் மணிகண்டன் வசமிருந்து உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப் பட்டது. தி.நகர் சதிஷ், சைதாப்பேட்டை ரஞ்சித்குமார் ஆகியோர் அடுத்தடுத்து சிக்கினர். அவர்களிடமிருந்து 2000 டைடல் (Tydol) மாத்திரைகள், 690 நைட்ரவிட் (Nitravet) மாத்திரைகள், 160 ரதிக் (Radik) மாத்திரைகள், 130 டபால் (Tpவி) மாத்திரைகள் என 2980 உடல்வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் கொடுங்கையூர் போலீசார் சோதனையில் ஆட்டோவில் உடல்வலி நிவாரண மாத்திரைகளோடு வந்த. திருவொற்றியூர் பிரவு, கொடுங்கையூர் ஜாஃபர், கொளத்தூர் சூர்யா ஆகியோரிடமிருந்து 428 நைட்ரவிட் மாத்திரைகள் மற்றும் 150 டைடல் மாத்திரைகள் என மொத்தம் 578 உடல்வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப் பட்டது. ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *