வடசென்னை ராயபுரத்தில் மிகப் பழமையான அமெச்சூர் மற்றும் தொழில் ரீதியான குத்துச்சண்டை கிளப்புகளில் ‘சின்னப்பா பாக்ஸிங் கிளப்’ என்ற பெயர் தவிர்க்க முடியாதது!
1938-ஆம் ஆண்டில், துவங்கப் பட்டபோது அதன் பெயர், சின்னப்பா ‘ஜிம்னாஸ்டிக் பாக்ஸிங் கிளப்’ என்றிருந்தது.
ஏராளமான ஆண்-பெண்களை ஒய்எம்சிஏ அமெச்சூர் விளையாட்டுப் போட்டிக்கு அனுப்பி வைத்தும் பலர் அரசுப்பணியில் பாக்ஸிங் மெடல் மூலமாக அமர வைத்தும் அழகு பார்த்தது சின்னப்பா பாக்ஸிங் கிளப்.
சில காலங்கள் குத்துசண்டை பயிற்சிக் கூடம், போதிய கவனிப்பு இன்றி கிடக்க, முன்னாள் மாணவர்களில் ஒருவரான புங்கை பௌ. பாஸ்கரன் மீண்டும் ‘கிளப்’ புக்கு புதுரத்தம் பாய்ச்ச குருமார்களிடம் (கோச்சர்) பேசினார். குத்துச்சண்டை பயிற்சி மையத்தின் தலைமை ஆசான்கள் குப்புசாமி மற்றும் பத்மநாபன் பச்சைக்கொடி காட்டினர்.
இப்போது பௌ. பாஸ்கரனின் முறையான பயிற்சியில் மீண்டும் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது, சார்பட்டா பரம்பரை வழி, சின்னப்பா பாக்ஸிங் கிளப்…
ந.பா.சே
சார் வணக்கம் எங்கள் சின்னப்பா பாக்ஸிங் கிளபின் பெருமையை கூறியதற்கு மிக்க நன்றி சார். என்றும் உணர்வுள்ள மாணவனாக நான்…….. புங்கை பெள.பாஸ்கரன்
மிக்க மகிழ்ச்சி பாஸ்கர் சார்…
வடசென்னையின் பழமையை
சொல்லாமல் போவோமா?