18 டூ 88 வரை கைகோத்த நண்பர்கள் பொது அறிவு சங்க விழா!

பதினெட்டு வயதிலிருந்து எண்பத்தியெட்டு வயதை கிராஸ் செய்துள்ள நூற்றுக்கணக்கான நட்புகள் ஒன்றிணைந்த ஒரு விழா சென்னையில் ஆண்டு தோறும் நடக்கிறது. நண்பர்கள் பொது அறிவுச்சங்கம் என்ற பெயரில் 1985- ஆம் ஆண்டுமுதல் சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த மெகா டீம்.
இந்த முறை (25.03.2022) இவர்கள் தேர்ந்தெடுத்தது ஏலகிரி இன்பச்சுற்றுலா. ‘மார்ச் 25ஆம் தேதி காலை சேத்துப்பட்டு குசலாம்பாள் திருமணமண்டபம் அருகில் குடும்பத்தோடு சங்கத்து மெம்பர்ஸ் ஆஜர் ஆகியே தீரோணும்’ என்று ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் சிவகார்த்திகேயன் போல பொறுபேற்ற ஒருவர் சொல்ல… அனைவரும் எட்டு மணிக்கே ‘உள்ளேன் ஐயா’ என்று வந்து நின்றனர். அடுத்த சில நிமிடங்களில் திட்டமிட்ட சங்கத்து மெம்பர்ஸை சுமந்தபடி பேருந்து புறப்பட்டது. சுவையான சுற்றுண்டி பேருந்திலேயே இருக்கை தேடி வந்து சேர… திட்டமிட்ட படி மதியம் ஒரு மணிக்கே ஏற்காட்டில் போய் நின்றது பேருந்து. மதிய உணவுக்குப் பின் சற்று ஓய்வு. அதன் பின்னே, ‘வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு தூரமில்லை’ என்று சீனியர்களை உற்சாகப்படுத்தி ஏற்காட்டின் முக்கிய பகுதிகளுக்கு இளைஞர்கள் அழைத்துப் போயினர். அடுத்த நாளுக்கு காணும் காட்சிகளை, படகு சவாரிகளை மிச்சம் வைக்க வேண்டும் என்பதற்காக கொஞ்சம் விட்டு வைத்தனர். திருப்பத்தூர் தாலுகாவின் ஆதவனூர் கிராமத்தில் அமைந்த ஹோட்டல் கோல்டன் நெஸ்ட்டில் மாலை நேர தேநீர் ரிலாக்ஸ் முடிந்து அடுத்து அரைமணி நேரம் ரெஸ்ட் ! நெக்ஸ்ட் ? 6.30 க்கு நண்பர்களின் களியாட்டம் பல்சுவை நிகழ்ச்சி என மீண்டும் கொண்டாட்ட வேளை தொடங்கியது. இரண்டு மணிநேர மகிழ்வில் மொத்தமாய் மூழ்கி 18 டூ 88 ப்ளஸ் திணறியது. மீண்டும் ரிலாக்ஸ் இரவு 9.00 மணிக்கு இரவு விருந்தாக தொடங்கியது. இரவு 10.00 மணிக்கு நண்பர்களின் சுடரொளிக் களியாட்டம் (Camp Fire) மீண்டும் களை கட்டியது. முதல் நாள் வெள்ளிக்கிழமையை விட அடுத்த நாள் (26.03.2022) சனிக்கிழமை இன்னும் சூடு பிடித்தது.

யோகப் பயிற்சி, தேகப் பயிற்சி, பஜனைப் பாடல்கள் என்று எல்லா ஏரியாவிலும் நண்பர்கள் கலந்து கட்டி உற்சாகத்தோடு திறமையை வெளிப்படுத்தினர்.
இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, சங்கத்தின் ஆண்டறிக்கை வாசித்தல், பொதுக்குழு கூடுதல், நண்பர்களின் கலை இரவு, கலாச்சார நிகழ்ச்சியும் தடையின்றி போய்க் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் (27.03.2022) ஞாயிறு பகல் இரண்டு மணிக்கு, திட்டமிட்டபடி அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடினர். சென்னை சேத்துப்பட்டு நோக்கி பேருந்து புறப்பட்டது. பொழுது சாய்வதற்குள் மெட்ராசை அனைவருமே பாதுகாப்பாக தொட்டு விட்டனர். சாதாரணமாகப் பார்த்தால் ஜூனியர்ஸ் – சீனியர்ஸ் குடும்பத்தோடு இணைந்து பயணித்த ஒரு டூர் இது – அவ்வளவுதான்… சங்கத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனித்தன்மை கொண்ட பிரமாண்ட ஆற்றலாளர்கள். பலர், சங்கத்தின் மூலமாகவே படித்து – நட்புகளை வலுப்படுத்தி நாட்டின் மிக உயரிய துறைகளில் கோலோச்சுகிறவர்கள்… பணி ஓய்வு பெற்று பல ஆண்டுகளுக்கு பின்னரும் (இப்போதும்) அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாய் இயங்கும் வல்லுநர்கள்… நம் அன்புக்குரிய சங்கப் பொதுச் செயலாளர் மருத்துவர் வீ. ரகுநாதன் ( அரசின் தலைமை மருத்துவர் – ஓய்வு) அதற்கு நேரடி உதாரணமாக சாட்சியம்! சாதியோ மதமோ மொழியோ இனமோ கலக்காத ஒரு அமைப்பு 37 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது வியப்பின் உச்சம்… ! (தொகுப்பு: ந.பா.சே – பிரீத்தி -எஸ்)

முக்கிய குறிப்பு : பயணத்துக்கு முதல் நாள் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட அழைப்பிதழின் சாராம்சம் பாருங்கள்!

“நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள் 25.03.2022 காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு குறித்த நேரத்தில் குசலாம்பாள் திருமண மண்டபம் அருகில் வருகை தர வேண்டும். விருந்து உபசரிப்பில் சைவ உணவுகள் மட்டுமே இடம் பெறும். அசைவ உணவு தேவைப்படுவோர் தாங்கள் தனிப்பட்ட முறையில் வாங்கி உண்ணலாம் . தனித் தனியே வெளியில் செல்வதை தவிர்த்து நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு ஒத்துழைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. நண்பர்கள் அனைவரும் பாதுகாப்போடும் விழிப்புணர்வோடும் வழக்கமான உற்சாகத்தோடும் ஏலகிரி இன்பச் சுற்றுலாவில் பங்கேற்கும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அனைவரும் நாம் ஏலகிரியில் தங்கும் இடத்தை குறித்த விவரங்களை வீட்டில் கொடுத்துவிட்டு வரவும். அனைவரும் நீங்கள் சாப்பிடும் மருந்து மாத்திரைகளை மறக்காமல் கொண்டு வரவும். மேலும் அனைவரும் உங்கள் ஆளறி அட்டையை(ஆதார்) கொண்டு வரவும். கொரோனாவின் தடுப்பு மந்திரங்களான கிருமி நாசிளி பயன்படுத்துதல், முகக்கவசம் அணிதல். சமூக இடை வெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றவும். பல மணி நேரங்கள் ஒதுக்கி, உயர் மட்டக் குழுவினரோடு விவாதித்து, இந்த சுற்றுலா பயண விவரங்களுக்கும், பொதுக் குழு விவரங்களுக்கும் வடிவம் கொடுத்து, தட்டச்சும் செய்து கொடுத்த சங்கத்தின் துணைச் செயலாளர், திரு துரைபாண்டியன் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் : வீ. ரகுநாதன், சங்கப் பொதுச் செயலாளர் …)

நீங்க கலக்குங்க யூத்….

2 thoughts on “18 டூ 88 வரை கைகோத்த நண்பர்கள் பொது அறிவு சங்க விழா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *