உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
உலகம் முழுவதும் மார்ச் 22 தேதியில் தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபா கூட்டம் இந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றிய ஆண்டார்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்த்தி தலைமையில், கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
“தண்ணீரின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் வீணாக்காமல் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் புனரமைத்து மழைக்காலங்களில் அதில் தண்ணீரை சேமித்து வைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் திட்டங்கள் வகுக்க வேண்டும்” என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
பொன்கோ. முத்து